ஒரு புதிய புற்றுநோய் தடுப்பூசி நாம் எப்போதாவது புற்றுநோயைக் குணப்படுத்த முடியுமா?

உலகில் வாழும் மனிதர்கள் இறப்பதற்கான காரணத்தில் இரண்டாம் இடத்தைப் பிடித்திருக்கும் நோய் புற்றுநோய் ஆகும். வருடங்கள் போகப்போக இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு தான் போகிறது. விஞ்ஞானத்தின் உதவியுடன் மிக ஆபத்தான நோய்களை எல்லாம் அழிக்க அல்லது குணப்படுத்த முடிந்த நமக்குப் புற்றுநோயை எதிர்த்து நம்மால் வெல்லமுடியாத நிலையில் இருக்கிறோம். இருந்தாலும் விஞ்ஞானிகள் தொடர்ந்தும் புற்றுநோய்க்கான ஒரு தீர்வை நோக்கிச் செல்கிறார்கள். அசுNயு தடுப்பூசி, புதிய சிகிச்சை முறைகள், ளஅயசவ னசரபள போன்ற பல விதமான முறைகளின் உதவியுடன் எதிர்காலத்தில் புற்றுநோயின் காரணத்தால் இறப்பவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க முயல்கின்றனர். இது தானா நாம் எல்லோரும் பல ஆண்டுகளாக ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த விடிவு காலம்?

இதைப் பற்றித் தொடர்ந்து பார்ப்பதற்கு முன்பு, புற்றுநோய் என்றால் என்ன? பொதுவாக நமது உடலில் காணப்படும் உயிரணுக்கள் பிரதி செய்யப்படும் போது அதில் காணப்படும் மரபணுவும் மாற்றமடையாமல் புதிதாக உருவாக்கப்படும் அந்த உயிரணுவில் காணப்படும். ஆனால் சில வேளைகளில் இவ்வாறு பிரதி செய்யும் போது அந்த மரபணுவில் ஒரு சில மாற்றங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. இது எல்லோரின் உடலில் காணப்படும் ஒரு சாதாரண நிகழ்வு ஆகும். பொதுவாக இந்தப் பழுதை நமது உடல் சரி செய்துவிடும். ஆனால் ஒரு சில வேளைகளில் இது சரி செய்யப்படாது. இதன் விளைவாக இப்படிப் பிழையாக உருவாக்கப்பட்ட ஒரு உயிரணுவிலிருந்து பிரதி செய்யப்படும் உயிரணுக்களும் அதே தவறான மரபணுக்களைக் கொண்டிருக்கும். இவற்றைத் தான் மருத்துவர் புற்றுநோய் உயிரணு என்று அழைக்கின்றனர். இதில் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால். ஒரு மனிதனின் வயது அதிகரித்துக்கொண்டு போகப் போக உடலில் உயிரணுக்களைச் சரி செய்யும் தன்மை குறைந்துகொண்டே போகும். இதன் விளைவாக முதியோர்களுக்குப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கும்.

இதில் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் இருக்கிறது. எல்லா புற்றுநோயும் ஒன்றில்லை. அவை உருவாகுவதற்கான மூலகாரணமும் வேறுபட்டிருக்கும். அதே நேரத்தில் அவற்றின் சிகிச்சைமுறையும் வேறுபட்டிருக்கும். உதாரணத்திற்குக் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கான சிகிச்சை முறை நுரையீரல் புற்றுநோயின் சிகிச்சை முறையிலும் வேறுபட்டது.

சரி புற்றுநோய் பற்றி அறிந்தது போதும். இனி தற்போது உள்ள சிகிச்சை முறைகளைப் பற்றிப் பார்ப்போம். புற்றுநோயை தற்போது கீமோதெரபி, கதிரியக்க சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை போன்ற முறைகளுடன் குணப்படுத்த அல்லது புற்றுநோயாளியின் உயிர்வாழும் நாட்களை அதிகரிக்க முயல்வர். உதாரணத்திற்கு கீமோதெரபியின் உதவியுடன் புற்றுநோய் உயிரணுக்கள் பிரதி செய்வதைத் தடுக்க முடியும். அது நல்ல விஷயம் தான், ஆனால் இதன் மறு பக்கமாக நமது உடலில் காணப்படும் ஆரோக்கியமான உயிரணுக்கள் பிரதி செய்வதும் தடுக்கப்படும். இதனால் பல விதமான பக்கவிளைவுகள் ஏற்படும். உங்களுக்கு நன்றாகத் தெரிந்த ஒரு பக்க விளைவு தான் முடி கொட்டுவது. கதிரியக்க சிகிச்சை ஊடாக புற்றுநோய் உயிரணுக்களுக்குச் சேதம் ஏற்படுத்த முயல்வர். இதில் உள்ள ஆபத்து புற்றுநோய் உயிரணுக்கள் மட்டுமில்லாமல் ஆரோக்கியமான உயிரணுக்களும் பாதிப்படைவது தான். தொடர்ந்து அறுவை சிகிச்சையின் உதவியுடன் ஒரு சில புற்றுநோய் உயிரணுக்களை மட்டுமே நீக்கிவிடமுடியும். ஆக மொத்தத்தில் அனைத்து புற்றுநோய்களையும் நம்மால் குணப்படுத்த முடியவில்லை. எனவே இன்றைய விஞ்ஞானிகளின் நோக்கம் ஒன்று தான். ஒரே ஒரு சிகிச்சை முறையின் உதவியுடன் அனைத்து புற்றுநோய்களையும் குணப்படுத்துவதே ஆகும்.

இந்த வரிசையில் தற்போது ஒரு புதிய புற்றுநோய் தடுப்பூசி ஒன்றப் பற்றிய ஒரு மருத்துவ ஆய்வொன்றை வெளியிட்டிருக்கிறார்கள். இந்தத் தடுப்பூசி மற்ற தடுப்பூசிகள் போன்று நோய் வருவதற்கு முன்பே பாதுகாப்பிற்குப் போடப்படும் ஊசி கிடையாது. இந்த தடுப்பூசி புற்றுநோய் வந்த பிறகு தான் போடப்படும். அதற்குக் காரணம் என்னவென்றால், இந்தத் தடுப்பூசியைத் தயாரிப்பதற்கு முதல், உடலில் எந்த விதமான புற்றுநோய் காணப்படுகிறது என்பதை நன்று அறிந்த பின் தான் முடியும். இந்தத் தடுப்பூசியின் செயல்முறை உங்கள் எல்லோருக்கும் தெரிந்தது போன்று தான் இருக்கிறது. கொரோனா காலத்தில் வாழும் உங்களுக்கு இதை விளக்கத் தேவையில்லை, இருந்தும் கூறுகிறேன். இது நமது உடலில் காணப்படும் புற்றுநோய் உயிரணுவின் வடிவமைப்பை நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியுடன் காண்பித்து அனைத்து புற்றுநோய் உயிரணுக்களையும் அழித்துவிடும். என்ன தான் இந்தத் தடுப்பூசியின் செயல்முறை நன்றாக இருந்தாலும், இதில் ஒரு சிறிய பிரச்சனை உள்ளது. இது ஒரு சில புற்றுநோய்களுக்கும் சில சூழ்நிலைகளிலும் மட்டுமே தான் பயன் படுத்த முடியும். அது மட்டுமில்லாமல் இந்தத் தடுப்பூசி அனுமதி பெற்று வெளிவரும் வரை பல ஆண்டுகள் போய்விடும்.

அடுத்ததாக personalised therapy என்று அழைக்கப்படும் சிகிச்சை முறையைப் பார்ப்போம். இதில் ஒரு நோயாளியின் புற்றுநோய் உயிரணுக்களைப் பரிசோதனை செய்து, அது வேகமாகப் பிரதி செய்வதற்கான காரணத்தை அறிந்த பின் அதற்கு ஏற்ற சிகிச்சை முறையைத் தேர்வு செய்வதே அதன் நோக்கம் ஆகும். ஆனால் இந்த personalised வாநசயில கூட அனைத்து புற்றுநோய்களையும் குணப்படுத்த முடியாது.

தற்போது அனைத்து புற்றுநோய்களுக்கும் எதிரியாக விளங்கக்கூடியது Antibody-drug conjugate என்று அழைக்கப்படும் ADCs தான் என்று நம்பப்படுகிறது. இதன் செயல்முறை எவ்வாறு என்று பார்ப்போம். இதற்குப் புற்றுநோய் உயிரணுக்களில் போய் இணையும் ஒரு பிறபொருளெதிரி என்று அழைக்கப்படும் antibody ஒன்றில் அந்த உயிரணுவை அழிக்கும் விஷத்தைப் பொருத்தி புற்றுநோயை மட்டுமே தாக்குவதே ஆகும். இதில் உள்ள விசேஷம் என்னவென்றால், இதனால் ஆரோக்கியமான உயிரணுக்கள் தாக்கப்படாது என்பது தான். ஆனால் இதில் ஒரு சின்ன பிரச்சனை உள்ளது. இந்த மருந்தை உருவாக்குவது என்பது அவ்வளவு இலகில்லை. தற்போது விஞ்ஞானிகள் இந்த சிகிச்சை முறையில் நம்பிக்கை கொண்டு அவர்களின் ஆராய்ச்சியைத் தொடர்கின்றனர். இதனால் மனித இனத்திற்கு வெகு விரைவில் ஒரு விடிவு காலம் கிடைக்கின்றதா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

846 total views, 6 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *