யேர்மனியில் செல்வி கீர்த்தனா விஸ்வநாதன் அவர்களின் பரத நாட்டிய அரங்கேற்றம்!

உடலும், உள்ளமும், உணர்வும் ஒன்றாகக் கலந்த
ஒப்பற்ற கலை நிகழ்வாக அமைந்திருந்தது.

கடந்த (22-10-2022 சனிக்கிழமை) ஜேர்மனியில் Neuenkirchen நகரில் அமைந்துள்ள மண்டபத்தில், செல்வி கீர்த்தனா விஸ்வநாதன் அவர்களின் பரத நாட்டிய அரங்கேற்றம் இடம்பெற்றது. பிரதம விருந்தினர்களாக திருமதி.பத்மா ராகுலன்,திரு.நாதன் ராகுலன் (Griffin College London Founder / Chief Executive Officer Dr Mrs Padma Rahulan and Managing Director / Financial Controller Mr Nathan Rahulan) ஆகியோh கலந்து சிறப்பித்ததுடன் அரங்கேற்ற நாயகி செல்வி கீர்த்தனா விஸ்வநாதன் அவர்களுக்கு நாட்டியச் சுடர் பட்டத்தையும் வழங்கினர். சிறப்பு விருந்தினரர்களாக ஆடற்கலால அதிபர் ஆசிரியர் ஆடற்கலாமணி திருமதி ரெஜினி சத்தியகுமார்,நாட்டிய வித்தகர் நிமலன் சத்தியகுமார் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

உடலும், உள்ளமும், உணர்வும் ஒன்றாகக் கலந்த ஒப்பற்ற கலை நிகழ்வாக அந்த நிகழ்வு அமைந்திருந்தது. முதலில் சலங்கைப் பூசையைத் தொடர்ந்து, மங்கல விளக்கேற்றி, தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்டது. இந்த தமிழ்த்தாய் வாழ்த்தை அரங்கேற்ற நாயகி கிற்றார், மற்றும் வயலின் வாத்தியங்களை இசைத்து அண்ணன் கீபோட் கருவியுடன் இருவருமாக இசைத்து நிகழ்ச்சியின் ஆரம்பத்தை மிகவும் அமர்களமாக சிறப்புறச் செய்தார்கள்.தொடர்ந்து வரவேற்புரையை அரங்கேற்ற நாயகியின் தாய் வழங்கினார்.
செல்வி கீர்த்தனா விஷ்வநாதனை பிஞ்சு வயதில் செதுக்கி எடுத்து அரங்கேற்ற மேடைக்கு அயராது பாடுபட்டு எடுத்து வந்த குரு,ஜேர்மனி சிவசக்தி நர்த்தனாலய அதிபர்,நாட்டிய கலாஜோதி,நாட்டிய தாரகை டாக்டர் திருமதி மைதிலி கஜேந்திரன் அவர்களையே சேரும். இந்த அரங்கேற்றம் டாக்டர் திருமதி மைதிலி கஜேந்திரன் அவர்களின் எட்டாவது மாணவியின் அரங்கேற்றமும் என்பதை பெருமைப் படித்திச் சொல்லிடலாம்.

773 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *