தேசிய உதைபந்தாட்ட போட்டியில் சாதனை படைத்த இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரிக்கும்; தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரிக்கும் பாராட்டுகள்!

இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி 18 வயது பிரிவு ஆண்களுக்கான தேசிய சம்பியன் ஆகியது
அகில இலங்கை 18 வயது பிரிவு ஆண்களுக்கான தேசிய உதைபந்தாட்ட போட்டியில் 2:0 என்ற கோல்களின் அடிப்படையில் கொழும்பு ஹமீட் அல் {ஹசைனி கல்லூரி அணியை வீழ்த்தி இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி தேசிய சம்பியன் ஆகியது. போட்டியின் போது எமது கல்லூரிக்கான இரண்டு கோல்களினையும் செல்வன் சிந்துஜன் பெற்று கொடுத்தமை குறிப்பிடத்தக்கது. வாழ்த்துக்கள் வீரர்களே! வெற்றிக்காக அயராது உழைத்த பயிற்றுநர்களுக்கும் எமது வாழ்த்துகள்.
மகாஜனா 17 வயதுப் பெண்கள் அணி தேசிய சாம்பியன்
அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான 17 வயதுப் பெண்கள் உதைபந்தாட்டடப் போட்டியில் மகாஜனக் கல்லூரி சாம்பியனாகியுள்ளது. இப்போட்டி (24.11.2022) கொழும்பு களணிய பிரதேசசபை மைதானத்தில் நடைபெற்றது. இறுதிப்போட்டியில் பொலனறுவை பன்டிவெவ மகா வித்தியாலயத்துடன் மோதிய மகாஜனா 2:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று சாம்பியனாகயது. இரண்டு கோல்களையும் அணித்தலைவி லயன்சிகா முதல்பாதி ஆட்ட நேரத்தில் உதைத்து வெற்றியை உறுதிப்படுத்தினார்.கல்லூரிக்கு பெருமைசேர்த்த மாணவிகளை வாழ்த்து கின்றோம்.
மகாஜனா 20 வயது பெண்கள் அணி தேசிய சாம்பியன்
அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான 20 வயதுப் பெண்கள் உதைபந்தாட்டடப் போட்டியில் மகாஜனக் கல்லூரி சாம்பியனாகியுள்ளது. இப்போட்டி (25.21.2022) கொழும்பு றேஸ் ஹோர்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இறுதிப்போட்டியில் குருநாகல் பெண்கள் மலியதேவ மகா வித்தியாலயத்துடன் மோதிய மகாஜனா 2:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று சாம்பியனாகயது. முதல் இரண்டு கோல்களையும் அணி உபதலைவி கிரிசாந்தினி(றோஸ்) முதல்பாதி ஆட்டநேரத்தில் உதைத்து வெற்றியை முன்னோக்கி நகர்த்தினார். இரண்டாவது பாதியாட்டத்தில் கிரிசாந்தினி மேலும் ஒரு கோலை செலுத்த ஆட்டநேர முடிவில் மகாஜனா 3:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியனாயது. கல்லூரிக்கு பெருமைசேர்த்த மாணவிகளை வாழ்த்துவதோடு, இரு அணிகளதும் வெற்றிக்காக அயராது உழைத்த பிரதம பயிற்றுநர் திரு.சி.சாந்தகுமார்(சாந்தன்) உதவிப் பயிற்றுநர் செல்வி இலக்சனா ஆகியோரை பாராட்டுகின்றோம்.
வீரர்களுக்கும்,வீராங்கனைகளுக்கும் பிரதேச செயலகத்தால் உற்சாக வரவேற்பு!
தேசிய மட்டத்தில் சாதனை படைத்து எமது பிரதேசத்திற்கு பெருமை தேடித் தந்த,மாகாஜனாக் கல்லூரி வீரங்கனை களுக்கும், இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியின் வீரர்களுக்கும்,பிரதேச செயலகத்தால் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. தொடர்ந்து மருதனார்மடத்தில் இருந்து நடை பவனியாக வரவேற்பு.