ரஜினியுடன் நடிப்பது என் கனவு
தமன்னா தமிழில் ஜெயிலர் படத்தில் ரஜினியுடனும் தெலுங்கில் சிரஞ்சீவியுடன் போலோ ஷங்கர் படத்திலும் நடிக்கிறார்.இதுகுறித்து தமன்னா அளித்துள்ள பேட்டியில், “ரஜினிகாந்துடன் நடிப்பேன் என்று இத்தனை ஆண்டுகளில் ஒரு தடவை கூட நான் நினைத்து பார்த்தது இல்லை. என்னை போன்ற எத்தனையோ நடிகைகள் அப்படி ஒரு வாய்ப்புக்காக காத்திருக்கையில் ஜெயிலர் படத்தில் அவரோடு நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. படப்பிடிப்பில் அவரோடு இணைந்து நடிக்கும் அந்த நாளுக்காக மிகவும் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கிறேன். எனது இத்தனை நாள் கனவு தற்போது நிறைவேறி விட்டது. இதை நினைத்தால் பெருமையாக இருக்கிறது. அவரோடு பாடல் காட்சிகளில் நடனம் ஆடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். அதற்காகவும் நான் காத்திருக்கிறேன்.
படமாகும் ஜெய்சங்கர் வாழ்க்கை
நடிகர், நடிகைகளின் வாழ்க்கை ஏற்கனவே சினிமா படங்களாக வந்து வரவேற்பை பெற்றுள்ளன. சமீபத்தில் மரணம் அடைந்த ஜமுனா வாழ்க்கையும் சினிமா படமாகிறது. நடிகை ஸ்ரீPதேவி வாழ்க்கையும் படமாக உள்ளது. இந்த நிலையில் மறைந்த பழம்பெரும் நடிகர் ஜெய்சங்கர் வாழ்க்கையையும் சினிமா படமாக எடுக்கும் முயற்சிகள் நடக்கின்றன. இதுகுறித்து ஜெய்சங்கரின் மகன் சஞ்சய் சங்கர் கூறும்போது,”நிறைய பேர் எனது தந்தை ஜெய்சங்கர் வாழ்க்கையை படமாக எடுக்க கேட்கிறார்கள். இதனால் எங்களுக்கும் ஆர்வம் வந்துள்ளது. ஜெய்சங்கர் 1965-ல் வெளியான இரவும் பகலும் படத்தில் அறிமுகமாகி 1990-கள் வரை முன்னூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி கதாநாயகனாக வலம் வந்தார். அவரை ‘தென்னகத்து ஜேம்ஸ் பொண்ட்’ என்று அழைத்தனர்.
என் நடிப்பு எனக்கே பிடிக்காது
சமீபகாலமாக விஜய் சேதுபதி கதைத்தேர்வில் அக்கறை செலுத்தாமல் வலுவற்;ற கதைகளில் நடிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.தமிழிலும் அவர் வில்லனாக பல படங்களில் நடித்து வரும் நிலையில், அவர் கதாநாயகனாக நடிக்கும் படங்கள் மட்டும் தோல்வி அடைந்து வருகின்றன. இந்நிலையில் இனிமேல் தனது படங்களில் அதிக கவனம் செலுத்த விரும்பும் விஜய் சேதுபதி, தன்னுடைய நடிப்பை மெருகேற்றும் விதமாக இரண்டு நடிப்புப் பயிற்சியாளர்களை நியமித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர் “கடந்த நான்கைந்து ஆண்டுகளாக என்னுடைய படங்களை நானே பார்ப்பதில்லை. ஏனென்றால் என்னுடைய நடிப்பு எனக்கே பிடிக்காது. மாஸ்டர் படத்தை பார்க்க சென்ற போது கூட முழுமையாக என்னால் பார்க்க முடியவில்லை” எனக் கூறியுள்ளார்.
949 total views, 6 views today