யேர்மனியில் டோட்முண்ட் நகரில் திறந்த வெளியில் திருவள்ளுவருக்கு சிலை!

யேர்மனியின் டோட்முண்ட் நகரில் தமிழர்களின் கடைகள் நிறைந்துள்ள Rheinische Str இல் ஒரு திருவள்ளுவர் சிலையை அமைக்க வேண்டும் என்று இரண்டு ஆண்டுகளாக எடுத்து வரும் முயற்சி வெற்றி அடையும் நிலையை எட்டி உள்ளது.

வீதியின் முக்கியமான சந்தியில் திருவள்ளுவர் சிலை அமைப்பதற்கான இடத்தை டோட்முண்ட் நகர சபை ஒதுக்கித் தந்திருக்கிறது. அத்துடன் அத்திவாரத்திற்கும் சிலை அமையவிருக்கின்ற பீடத்திற்குமான செலவுகளை பொறுப்பெடுப்பதற்கும் நகரசபை முன்வந்திருக்கிறது.

சிலைக்கான செலவை நாம் பொறுப்பெடுக்க வேண்டும்.அண்ணளவாக 20.000 யூரோக்கள் சிலை செய்வது தொடக்கம் அதைக் கொண்டு வந்து பொருத்துவது வரை முடிவாகும் என்று கணக்கிட்டிருக்கிறோம்.

கடந்த ஞாயிற்றுக் கிழமை 02.04.2023 அன்று எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், வர்த்தகர்கள் என்று பலர் கூடி திருவள்ளுவர் சிலை அமைப்பதற்கு செய்ய வேண்டிய திட்டங்கள் குறித்து ஆராய்ந்தோம். சிலைக்கான நிதியை எவ்வாறு திரட்டுவது என்பது குறித்தும் ஆராய்ந்தோம்.

திருவள்ளுவர் எல்லோருக்கும் உரியவர் என்பதனால் குறிப்பிட்ட சிலர் மட்டும் பங்களித்து சிலை அமைப்பதை விட, சிறு துளி பெருவெள்ளம் என்பது போல் பலருடைய பங்களிப்புடன் சிலையை செய்வதே பொருத்தமாக இருக்கும் என்று தீர்மானித்திருக்கிறோம்.

யேர்மனியின் முக்கிய நகரங்களில் ஒன்றான டோட்முண்டின் மையப் பகுதியில், பல்லாயிரக்கணக்கான மக்கள் நடமாடும் ஒரு வீதியில் திருவள்ளுவர் சிலை அமையவிருக்கிறது என்பது தமிழர்கள் அனைவருக்கும் பெருமை தரும் ஒரு விடயமாகும். திருவள்ளுவர் சிலை அமைவதற்கு உலகத் தமிழர்கள் ஆதரவு தர வேண்டும். உங்களால் இயன்ற தொகையை நற்பணிக்கு வழங்கி, தமிழின் பெருமையை உலகில் நிலைநிறுத்துவோம்.

Verein fuer tamilische Kuenstler e.V.
Volks Bank Dortmund Nord West
DE09 4406 0122 4086 4321 00
GENODEM1DNW
Paypal: paypalme/valluvar2023

894 total views, 6 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *