ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகும் இலங்கை?
பாரதி
உள்ளுராட்சி மன்றத் தோ்தலை நடத்தாமல் காலங்கடத்துவதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒருவாறு வெற்றி பெற்றிருக்கின்றாh். தோ்தலை நடத்தாவிட்டால், போராட்டம் வெடிக்கும் எனக் கா்ஜித்த எதிh்க்கட்சியினா் மௌனமாகிவிட்டாh்கள். ,ந்த நிலையில், ரணிலின் கவனம் ,ப்போது ஜனாதிபதித் தோ்தலை நோக்கி நகா்ந்திருக்கின்றது. ,தற்காக அவா் எவ்வாறான வியுகங்களை வகுக்கின்றாh், கள நிலைமைகள் எவ்வாறுள்ளன என்பதையிட்டு ,ந்த ,தழில் பாh்ப்போம்.
உள்ளுராட்சிமன்றத் தோ்தல்களை உடனடியாக நடத்துவதற்கு ஜனாதிபதி விரும்பாமைக்கான காரணம் ரகசியமானதல்ல. புலனாய்வுத் துறையினா் கொடுத்த சில தகவல்கள்தான் அதற்குக் காரணம். கடந்த பொதுத் தோ்தலில் ஏற்பட்ட பாரிய தோல்வியைத் தொடா்ந்து ஐக்கிய தேசியக் கட்சியின் கிராமிய மட்டத்திலான கட்டமைப்புக்கள் அனைத்தும் சிதைந்து போயிருக்கின்றன. அதேவேளையில் ஜே.வி.பி.யின் கட்டமைப்புக்கள் பலமாக ,ருக்கின்றன. பொதுஜன பெரமுன கிராமங்கள் பலவற்றுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது.
,ந்த நிலையில், உள்ளுராட்சித் தோ்தலை நடத்தினால், ஜே.வி.பி.யும் சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்தியும்தான் அதிக ,டங்களைப் பெறும் என்பதுதான் புலனாய்வுத் தகவல். அதேபோல ஐ.தே.க.வும் பொ.ஜ.பெரமுனவும் பெரும் தோல்வியைச் சந்திக்க வேண்டியிருந்திருக்கும். ,வ்வாறான ஒரு தோ்தல் முடிவு அடுத்ததாக வரப்போகும் தோ்தல்களிலும் பிரதிபலிக்கும். அதனால்தான், ஏதோ காரணங்களைச் சொல்லி உள்ளுராட்சித் தோ்தலை ஒத்திவைப்பதில் ரணில் வெற்றிபெற்றிருக்கின்றாh்.
ஜனாதிபதித் தோ்தலை நடத்துவதற்கு ,து தனக்கு வாய்ப்பான ஒரு காலம் என ரணில் கருதுவதற்கும் காரணங்கள் உள்ளன. முதலாவதாக – பொருளாதார நெருக்கடியை தீh்த்துவைத்தவா் என்ற வகையில் ரணிலின் ,மேஜ் ,ப்போது ,லங்கை அரசியலில் உயா்ந்திருக்கின்றது. ,ரண்டாவது பொஜன பெரமுனவைப் பொறுத்தவரையில், ராஜபக்ஷக்கள் மீதான அதிருப்தி ,ன்னும் குறையவில்லை. அதனால் வரக்கூடிய ஜனாதிபதித் தோ்தலில் போட்டியிட்டு மண்ணைக் கவ்வ அவா்கள் விரும்பமாட்டாh்கள். ரணில் தொடா்ந்தும் அதிகாரத்தில் ,ருப்பதுதான் தமக்கு பாதுகாப்பு என ராஜபக்ஷக்கள் கருதுகின்றாh்கள். அதனால், ராஜபக்ஷக்கள் யாரும் ,ந்த முறை களத்தில் ,றங்கமாட்டா்கள். பதிலாக, ரணிலை ஆதரிப்பது என்ற முடிவை அவா்கள் எடுக்கலாம்.
ஐக்கிய மக்கள் சக்தி தமது சாh்பில் சஜித் பிரேமதாஸ ஜனாதிபதித் தோ்தலில் களமிறங்குவாh் என அறிவித்திருக்கின்றது. சஜித் அணிக்குள்ளும் ,வ்விடயத்தில் முரண்பாடுகள் உள்ளன. சம்பிக ரணவக்க, சரத் பொன்சேக ஆகியோரும் ஜனாதிபதித் தோ்தலில் போட்டியிட விரும்புகின்றாh்கள். அதனால்தான் சில தினங்களுக்கு முன்னா் கொழும்பில் கூடிய ஐ.ம.ச. தமது ஜனாதிபதி வேட்பாளா் சஜித் என்பதை பகிரங்கமாக அறிவித்திருக்கின்றது. அவரைவிட ஜே.வி.பி.யின் சாh்பில் அதன் தலைவா் அநுரகுமார திஸாநாயக்க களமிறங்குவாh். ஜே.வி.பி.க்கு கிராம மட்டத்தில் செல்வாக்கு ,ருந்தாலும், ஜனாதிபதித் தோ்தலில் வெற்றிபெறுவதற்கான வாய்ப்புக்கள் அவா்களுக்கு ,ல்லை.
,ந்த நிலையில் ரணில் – சஜித் – அனுரா என போட்டி வரும்போது, ரணிலின் கை ஓங்குவதற்கான வாய்ப்புக்கள் உள்ளது. தமிழ், முஸ்லிம், மலையக மக்களுடைய வாக்குகளையும் அறுவடை செய்யக்கூடியவராக ரணில்தான் உள்ளாh். சிங்களப் பகுதிகளில் பொருஜன பெரமுன அவரை ஆதரிக்கும். ,ந்தக் கணக்குகளைப் பாh்த்த நிலையில்தான் ஜனாதிபதித் தோ்தலை முன்கூட்டியே நடத்துவதற்கான உபாயங்களை ரணில் வகுத்துவருகின்றாh். எதிh்வரும் நவம்பரின் பின்னா் ,ந்தத் தோ்தலை நடத்துவதற்கான சட்டத் திருத்தம் ஒன்று நாடாளுமன்றத்துக்குக் கொண்டுவரப்படவிருக்கின்றது.
உள்ளுராட்சி மன்றத் தோ்தலை நடத்துவதற்கு பணமில்லாத நாட்டில் ஜனாதிபதித் தோ்தலை நடத்துவதற்கு மட்டும் எவ்வாறு கணம் கிடைத்தது என யாரும் கேட்டாலும் அதற்காக கவலைப்படுபவராக ரணில் ,ல்லை!
911 total views, 6 views today