‘எழுதாத கவிதைக்கு முதல் பரிசு’

சுட்டெரிக்கும் வெய்யிலில் இரு தினங்களில் சுட்டுத்தள்ளிய ஒரு குறும்படம்.

பருத்தித்துறை சூழலில் ஒரு கதை மையம்கொண்டது

குறுகிய காலத்தில் எடுப்பது ஒரு கலை. கரு ஒன்று கிடைத்துவிட்டால் அதனை சிதைக்காது வளர்த்து எடுப்பது முக்கியம்.
ஒரு ஒவியக் கலைஞனுக்கு அழித்து அழித்து வரைவதும் பிடிக்காது, நீண்ட நேரம் ஓவியத்துள் நின்று மாற்றி மாற்றி, இருப்பதைக் கெடுப்பதும் பிடிக்காது. அது ஒரு மடைதிறந்த வெள்ளம் போன்று இருக்க வேண்டும்.

கலைஞனின் கைகளில் கமரா. அது பல கோணங்களை அழகுநயத்துடன் ஆளும். கைகளை விட்டு அகலாத கமரா. அசைவுகள் உயிர்ப்புடன் இருக்க அவசியம். ஸ்ராண் அது ஒரு மூலையில் இருந்து வேடிக்கை பார்க்க, காட்சிகள் கச்சிதமாக படமாக்க, ‘எழுதாத கவிதைக்கு முதல் பரிசு’ என்னும் குறும்படம் கடந்த 09.10,மே.2023 இருதினங்களில் வடமாகாணத்தில் எடுத்து முடிக்கப்பட்டது.

கதை, வசனம், பாடல், ஒளிப்பதிவு இயக்கம் கண்ணா. B.F.A. இசை, சஞ்ஜே சிவா.வெற்றிமணி தயாரிப்பில் வெளிவரும் இக் குறும் படத்தின் நிர்வாக முகாமையாளராக சாந்தி. தெய்வேந்திரன் அவர்களின் அற்பணிப்பான சேவையால் குறுகிய காலத்தில் இது சாத்தியமானது.
கண்ணா வின் இயக்கத்தில் வெளிவந்த தம்பட்டம் குறும் படமும், குறுகியகாலத் தயாரிப்பு. பலரது பாராட்டைப் பெற்றது.

நடிகர்கள் காட்சிக்கேற்ப தெரிவு செய்யப்பட்டனர். படத்தில் ஆச்சியின் நடிப்பும், கவிதையின் பாத்திரமும் பேசப்படும். ஒரு கட்டத்தில் பருத்தித்துறை டாக்டர் முருகானந்தன் அவர்கள் ஒரு காட்சியில் இயல்பாக வந்து போகிறார். அவர் எமக்கு தந்த ஆதரவு ஈழத்தில் குறும் பட வளர்ச்சிக்கான பெரும் அக்கறையாகவே கொள்ள வேண்டும்.

குறும் படத்தில் பங்குகொண்ட கலைஞர்கள் (ஆச்சி) சின்னப்பிள்ளை,(அப்பு) கிருஷ்ணன். அனித்தா, ஜெயந்தன், லோகநாயகி ஸ்ரீஸ்கந்தராஜா,டாக்டர் முருகானந்தம் ( டிஸ்பென்சரி பருத்தித்துறை டிப்போவுக்கு அருகாமையில்)
சாந்தி, தெய்வேந்திரன், தெய்வேந்திரன் சேனாதிராசா (யோ) ஆகியோர் இவர்களுடன், பல துணை நடிகர்களும் பங்கு எடுத்தனர்.
காட்சிகள் யாவும் வடக்கில் பருத்தித்துறை முனை கடற்கரை, வல்லிபுரக்கோவில், சுட்டிபுரம், நேற New way, Super Market, Main Street, Point Pedro, வயற்காடு மட்டுவில் நுணாவில் சாவகச்சேரி, கொடிகாமம், கைதடி, காரைநகர், ஆகிய இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டன. அனித்தா அனுபவமிக்க ஒரு சிறந்த நடிகையாக தொனிக்கின்றார். இவர்கள் அனைவரது ஒத்துழைப்புக்கும் வெற்றிமணி நன்றி கூறுகின்றது. வெகுவிரைவில் யேர்மனியில் திரையிடப்படும்.

860 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *