உன்னை ஊனமாக்கிறதா? இந்தச்; செயற்கை நுண்ணறிவு! AI
AI இன் விளக்கம் Artificial Intelligence ஆ?
அல்லது அம்மணம் இல(கு)வசம் (Ammanam Ila(ku)vasam)
- சிந்தனை சிவவினோபன் -ஜெர்மனி
AI என்று சொல்லப்படுகின்ற இந்த புதிய தொழில்நுட்பத்தின் விரிவாக்கமாக, நாம் தலைப்பில் பார்த்த அந்த விரிவாக்கத்தையும் எடுத்துக் கொள்ளலாம், அல்லது Artificial intelligent எனப்படும் இதையும் சொல்லாம். இந்த AI இன்று பிறந்த விசித்திர மாருதி. இது மனிதாபிமான குழந்தையாக மாற இன்னும் பல கட்டங்கள் உண்டு. இப்போது கணினிக்குள் இருக்கும் போதே, இது செய்யும் சேட்டைகள் ஏராளம். ஆம் கற்பிக்கும் ஆசிரியை கூட களங்கப்படுத்தி மாற்றுவதற்கு அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்த இந்த தொழில்நுட்பத்தை வேறு எவ்வாறு சொல்ல முடியும்? இது இன்னும் ஒரு சில வருடங்களில், தானியங்கி ஆசையும் பௌதீகவியல் பொருளாய் மாறினால், அதன் விளைவுகள் எண்ணில் அடங்காதவை. இதுபோல் புதிய தொழில்நுட்பங்களின் வருகை எப்போதும் தலைமுறையை தலைகீழாக திருப்பிப் போட்டு விடும்.
கால்நடைகளாக, கால்நடைகளோடு வாழ்ந்த மனிதனிற்கு, வாகனங்கள் வந்ததும் வேகத்தினை அதிகரிக்க, விபத்தினில் கொண்டு சென்று விட்டது இந்த தொழில்நுட்பம். இந்தக் கண்டுபிடிப்புகளின் மத்தியில் உடலை அசைத்து விபத்தில் நிறுத்தும் பௌதீகவியல் வாகனத்தை தொடர்ந்து, மனதை அசைத்து விபத்தில் நிறுத்தும் இலத்திரனியல் கண்டுபிடிப்புகள் ஆரம்பம் ஆகின. அதுவே கணினி. இன்று உடலையும் அசைக்க விடாமல், மனதையும் அசைக்க விடாமல், புதிய சிந்தனையை மட்டும் அசைக்க வைத்து மற்றைய அனைத்து பகுதிகளையும் ஊனமாக்கும் புதிய முயற்சியே இந்த AI என்று சொன்னால் அதிலும் ஒரு சில குறைபாடுகள் உண்டு.
என்னடா எடுத்தவுடனே குறைகளை மட்டும் சொல்லுகின்றேன் என்றால்! தொழில்நுட்பம் ஒருபோதும் குறைவானது அல்ல. கத்தி ஒவ்வொரு முறையும் தீட்ட தீட்ட கூராகிக் கொண்டே செல்லும். ஆனால் அந்தக் கத்தியை குழந்தையிடமும், மூளை குறைபாடு கொண்டவர்களிடமும் கொடுக்கக் கூடாது. அவ்வாறு கொடுத்தால் ஆயுதம் தாங்குபவருக்கு மட்டுமல்ல, தள்ளி நின்று பார்க்கும் உயிரிற்கும் ஆபத்து ஆகிவிடும். அதைத்தான் ஆரம்பத்தில் சொன்னேன் புதிய தொழில்நுட்பங்கள் வர வர விபத்துக்கள் அதிகரித்துக் கொண்டு செல்கின்றது. AI என்கின்ற இந்த தொழில்நுட்பத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்றால் அல்கோரிதம் ( Algorithm ) என்கின்ற ஒரு விடயத்தை ஆராய்ச்சி செய்ய வேண்டும். அதாவது உங்களுக்கு கணிதம் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் கிடையாது, உங்களுக்கு படம் வரைய தெரிந்திருக்க வேண்டிய அவசியம் கிடையாது, உங்களுக்கு பாடல் எழுத தெரிந்திருக்க வேண்டிய அவசியம் கிடையாது, உங்களுக்கு ஆர்வம் இருந்தால் மட்டும் போதும் இப்படி ஒரு படம் வரைந்தால் வடிவாகா இருக்கும், இப்படி ஒரு கவிதை எழுதினால் அழகாக இருக்கும், இப்படி ஒரு கணிதத்தின் தீர்வை கண்டுபிடித்தால் அறிவு கூர்மையாக இருக்கும், என்கின்ற விடயத்தை கொடுத்தால் மட்டும் போதும், உங்கள் நண்பர் உங்களுக்காக நன்றாக படம் வரைந்து தந்தால், நன்றாக கவிதை எழுதி தந்தால், நன்றாக கணக்குப் புதிர்களின் தீர்வுகள் கண்டுபிடித்து தந்தால், அதை உங்களுடைய கண்டுபிடிப்பாக மற்றவர்களிடம் காட்டி நீங்கள் பெருமைப்பட முடியும் என்றால், அதுதான் இந்த AI .
இந்த AI, அல்கோரிதம் என்கின்ற ஒரு கணித அமைப்பின் மூலமாக செயற்பட்டு வருகின்றது. அல்கோரிதம் என்றால், ஒரு செயற்பாடு செயல்படுவதற்கு எப்படிப்பட்ட நிகழ்தகவுகள் இருக்கின்றது, உதாரணத்துக்கு சதுரங்க விளையாட்டில் ஒவ்வொரு சிப்பாய்களையும், ஒவ்வொரு காய்களையும், அரக்கும் பொழுது, எப்படிப்பட்ட விளைவு ஏற்படும் என்பதை முன்கூட்டியே கணித்து வைப்பதைப் போன்று, நீங்கள் சொல்லுகின்ற வார்த்தைகளிற்கு ஏற்றால் போல்,ஏற்கனவே பதிந்து வைக்கப்பட்டிருக்கின்ற நிகழ்தகவுகளை வைத்துக்கொண்டு,நிகழ்ச்சிகளை வைத்துக் கொண்டு,அனுபவங் களை வைத்துக்கொண்டு,பதிவுகளை வைத்துக்கொண்டு,புதிய விடயங்களை உங்களுடைய சிந்தனையில் தோன்று கின்ற அந்த நிகழ்ச்சிக்கு ஏற்றால் போல் மாற்றி, புதிதாக உருவாக்கித் தருவது தான் இந்த AIஎன்கின்ற தொழில்நுட்பமாகும்.
இது பலருக்கு உதவியான ஒரு விடயம். உதாரணத்திற்கு தொழிலில் முன்னேற வேண்டும் என்கின்ற ஒருவருக்கு, தன்னுடைய சிந்தனையை விரிவாக்கிக் கொடுப்பதற்கு உதவி செய்யும். கை ஊனமான ஒருவருக்கு, அவரின் சிந்தையில் இருக்கின்ற ஓவியத்தை வரைந்து கொடுப்பதற்கு உதவி செய்யும். புதிய சிந்தனை மற்றும் வார்த்தை ஜாலங்கள் தெரிந்த ஒருவருக்கு அதை கவிதை நயமாக அல்லது கதையாக மாற்றி கொடுக்க உதவி செய்யும். ஆம் இன்னும் ஒரு படி மேலே சென்று,வடிவாக புரிந்து கொள்ள வேண்டும் என்றால். உங்கள் வீட்டு சமையல் அறைக்குள் இருக்கின்ற காய்கறிகளை வெட்டுகின்ற சிறிய கத்தியை போன்று, வீட்டின் கொல்லைப்புறத்தில் இருக்கின்ற விறகுகளை வெட்டுகின்ற பெரிய கோடாலி போன்றும், இந்த AIயும் பல பரிமாணத்தில் பல கூரான ஆயுதங்களாக காணப்படுகின்றது.
ஆனால் ஆயுதங்கள் வைக்கப்பட்டு இருக்கின்ற இந்த அறைக்குள், குழந்தை பிள்ளையோ, மனநிலை குறைபாடான ஒருவரோ சென்றால்,அது அவரின் உயிரை மட்டுமல்ல சமுதாயத்தின் உயிரையும் சேர்த்து பாதிக்கும். இந்த AI என்கின்ற தொழில்நுட்பம் சிறந்த, மனிதனுடைய சிந்தனையை வெவ்வேறான பரிமாணத்தில் உயர்த்தக்கூடிய ஒரு பிரம்மாண்டமான தொழில்நுட்பம். ஆனால் இந்த தொழில்நுட்பம் மணித்தியாளத்திற்கு ஒளியின் வேகத்தில் பயணிக்க கூடிய ஒரு வாகனத்தைப் போன்றது. இந்த வாகனத்தை பயணிப்பதற்கு கண்டிப்பாக சரியான ஓட்டுனர் பத்திரம் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட வேண்டும்,என்கின்ற சட்டதிட்டம் வந்ததன் பின்பாக, அவர்களின் கையில் மட்டும் இந்தத் தொழில்நுட்பம் தவலுமேயானால், அடுத்த தலைமுறை நேராக வேகமாக நடக்கும் அல்லா விட்டால், மிக விரைவில் அகிலம் முழுதும் அம்மணம் இலவசம்.
சிகிரியா கோட்டையில் வரையப்பட்டுள்ள பெண்கள், வெவ்வேறு ஆடைகளுடன் (அக்கால) வரையப்பட்டிருந்தால் எவ்வாறு இருந்து இருக்கும் என்ற கற்பனையில் AIதொழிநுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட படங்கள்
AI TEC | செயற்கை நுண்ணறிவு கொண்ட செய்தி வாசிப்பாளர். இந்தியா ஓடிசாவில் “AI” தொழில்நுட்பம் மூலம் செயற்கை நுண்ணறிவு கொண்ட செய்தி வாசிப்பாளரை தனியார் தொலைக்காட்சி சேவையானது உருவாக்கியுள்ளது. “லீசா” என இந்த AI தொழில்நுட்ப பெண்ணுக்கு பெயரிட்டுள்ளனர். ஆங்கிலம் மற்றும் ஒடிசா மொழிகளில் செய்திகளை வாசிக்கின்றது அந்த பெண். மேலும் அந்த பெண்ணை சமூக ஊடகங்களிலும் பின்தொடரலாம் என குறித்த செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது.
1,025 total views, 3 views today