உலகை எமக்கு கையில் தந்த தமிழன் – சுந்தர் பிச்சை

உலகில் எதையும் தேடித்தரும் புழழபடந, செல்போனை ஆக்கிரமிக்கும் யுனெசழனை, வலைத்தளங்களை காட்டுவதற்கு பயன்படும் ஊhசழஅந, என்று இப்படி நவீன கால தொழில்நுட்ப அம்சங்கள் பலவற்றின் வேகமான வளர்சிக்குப் பின்னனியில் இருக்கும் தமிழின் சுந்தர் பிச்சை.

படிப்படியாக முன்னேறுவது என்றால் என்ன, முன்னேறிக் கொண்டு இருப்பதற்கு என்னவெல்லாம் செய்யவேண்டும், விழுந்தால் எழுந்திருப்பது எப்படி என ஆர்வத்துடன் பயணிக்க துடிக்கும் அனைவருக்கும் எழும் இதைப்போன்ற கேழ்விகளிட்கெல்லாம் விடைதான் சுந்தர் பிச்சையின் வாழ்க்கை.
பிச்சை சுந்தரராஜன் எனும் இவர் தமிழ்நாட்டில் உள்ள மதுரை மாவட்டத்தில் பிறந்தார்.இவரது பெற்றோர் ரகுநாத பிச்சை மற்றும் லட்சுமி.இவர் ஜூலை மாதம் பன்னிரண்டாம் தேதி 1972 ஆம் ஆண்டு பிறந்தார்.
இவரது தந்தை ஒரு மின் பொறியாளர் தாய் ஒரு சுருக்கெழுத்தாளர்.சுந்தர் பிறந்த பின்பு அவர் அப்பணியை விட்டு முழுநேர குடும்ப பெண்மணியாக மாறினார்.

பிறந்ததிலிருந்தே நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இவர்
சிறிய வீட்டிலிருந்தே வளர்ந்தார். முதன் முதலில் தன்
தந்தை வீட்டிற்கு புதிதாக ஒரு தொலைபேசியை
வாங்கிவந்த பொழுது அதன் மூலம் பல
விஷயங்களை கற்று கொள்ள ஆரம்பித்தார்.
அதில் அவர் விசேஷதிறன் பெற்றிருந்தார்.
தான் டயல் செய்த எண்களைமுழுவதும் நினைவில்
வைத்துக் கொண்டிருந்தார். அதுவே அவரது
வாழ்வில் மின்னணு சாதனங்களுடனான முதல்
தொடர்பாகும். இன்று தொழில்நுட்ப உலகை ஆளும்
நிறுவனத்தின்தலைமை பதவிக்கு உயர்ந்திருப்பவர் இவர்.

ஐ.ஐ.டி கரக்பூரில் பொறியியல் பயின்ற இவர், அமெரிக்காவில் உள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில், பொருளறிவியல் பட்டம் பெற்றார்.

சுந்தர் பிச்சையின் இளமைக் காலங்களில் வீட்டில் தொலைக்காட்சி கூட கிடையாது. அவரது 12 ஆவது வயதில் வீட்டிற்கு கொடுக்கப்பட்ட தொலைபேசி இணைப்பு மட்டும் தான் ஒரு ஆடம்பரப் பொருள். இணையத்தளம் (ஐவெநசநெவ) நடைமுறையில் இல்லாத காலத்தில், கணனி (ஊழஅpரவநச) மற்றும் தொழில்நுட்பம் பற்றிய அறிவை, பத்திரிகைகள், புத்தகங்கள் ஊடாகவும் வளர்த்துக் கொண்டார். தனது இளமைக் காலத்தில் தனிமையில் இருந்து வாசிப்பதிலேயே தனது முழு நேரத்தயும் பயன் படுத்தினார். அதனால் அவருக்கு நண்பர்கள் வட்டாரம் கிடையாது.
2004ஆம் ஆண்டில் அமெரிக்காவில் உள்ள கூகுள் நிறுவனத்தில் இணைந்த அவர், 2015 இல் இருந்து இன்று வரை புழழபடநலின் (ஊநுழு) முதன்மை செயல் அலுவலராக செயல்ப்படுகின்றார்.
“எப்போதும் கடினமான பாதைகளை தேர்ந்தெடுங்கள், அந்த பாதையில் தான் போட்டிகள் அதிகம் இருக்காது, அதன் இறுதியில் கிடைக்கும் வெற்றி உங்களை உச்சத்தில் நிறுத்தும்.” என்ற சுந்தர் பிச்சையின் கூற்று தான் எம்மை போன்ற இளம் சமுதாயத்திற்கு எடுத்துக்காட்டாக அமைகிறது.
எப்படி பட்ட சூழ்நிலையில் இருந்தாலும் நாம் ஒரு இலக்கை அடைய வேண்டும் என நினைத்து முயற்சித்தால் வாழ்க்கையில் எந்த நிலையையும் நாம் அடையலாம், என்பதை இவர் நிரூபித்திருக்கிறார்.

924 total views, 2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *