ஆண் பெண் இடைவெளி

அங்காடியில் ஒரு பலவீனமான பாட்டி தன் பொதியைச் சுமக்க கடினப்பட, உடனே சென்று உதவுகிறோம். இதுவே குறுப்பிட்ட பாட்டி ஒரு பாட்டாவாக இருந்தால் அதே விரைவாக உதவிடுவோமா? அல்லது பாட்டா அவருடைய பலவீனத்தை வெளிப்படையாகக் காட்டிடுவாரா?

இக்கேள்வி சமுதாயத்தின் சர்ச்சையான ஒரு நிலைமையை காட்டுகிறது.
உலகின் உயரதிகாரிகளாக மிகக் குறைந்த பெண்கள் இருப்பதற்கும், சராசரி ஆண்கள் பலர் மன-அழுத்ததால் மரணிப்பதற்கும் இதுவே காரணம்.

தற்போது ஜேர்மனியில் Gender-payment-gap அதாவது ஆண்-பெண் சம்பள வேறுபாடு 21மூ ல் உள்ளது. காரணம் என்ன? விளைவுகள் என்ன?
Facebook நிறுவனத்தின் துணைமுதலாளியாக Sheryl Sandberg 2007ம் ஆண்டில் இருந்து பணிபுரிகிறார். Google Disney போன்ற பல நிறுவனங்களில் முதலாளியாக இருந்த இவர் இன்று உலகின் மிகப் பணக்காரர்களில் ஒருவர்.

இவரது உரையை நான் பார்க்கையில், சுவாரஸ்யமான ஒரு விடயத்தைச் சொன்னார். 3மணி நேர செயளாளர் கூட்டத்தின் பிறகு, பெண்களுக்கான கழிப்பறை இருக்குமிடத்தை ஆண் அதிகாரிகளிடம் வினாவ, யாருக்கும் தெரியவில்லையாம். காரணம் உயர்செயலாளர் மாடிக்கு பெண்கள் யாரும் அதுவரை வரவில்லை என்ற உண்மையை Sandberg விளக்கினார்.

உலகளாவிய ரீதியில் பாராளுமன்றங்களில் தற்போது 23.8% (June 2018) மட்டுமே பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர். பொதுவாக உயர் செயளார்களாக பெண்கள் மிகக்குறைவாகவே இருக்கின்றனர். இதைபற்றி Sandbergபெண்கள் ஆண்களை விட கடினமான தீர்மானங்களை எடுக்கவேண்டியுள்ளார்கள். குடும்பமா, தொழிலா எனும்போது, அதிகமான பெண்கள் குடும்பத்தை நோக்கியே முடிவு எடுக்கின்றனர்!“ (Sandberg 2015).

இந்த முடிவை பெண்கள் மணம் புரிவதர்க்கு முதலே எடுத்து, கிடைக்கக்கூடிய வாய்ப்புக்களை தவறவிடுகின்றனர். தான் செயலமர்வு களுக்கு செல்லும்போது பெண்கள் நிர்வாக சபையில் இருந்தாலும் முன்வந்து கலந்துரையாடுவதை விரும்பாததையும், எண்ணங்களை முன்நிறுத்தாதையும் கண்டு Sandberg வருந்துகிறார். இப்படி பெண்கள் தம் திறமைகளை மழுங்கடிக்கின்றனர். இதற்கு பெண்கள் மட்டும் காரணமல்ல, சமுதாயமும் முக்கிய பங்கேற்கிறது. வெற்றிகரமான பெண்ளைக்கண்டு அதிக மக்கள் பயமும், பொறாமையையுமே கொள்கின்றனர் (UOC 2015).

நியூ யோர்க்கில் உள்ள Colombia பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு ஆராட்சியில், பெண் வழக்கறிஞர் Heidi வெற்றிகரமாக முடித்த ஒரு வழக்கை, இரு மாணவகுழுக்களிடம் ஒரு அறிஞர் சமர்பித்தார். அங்கே ஒரு குழுவிடம் Heidi என வழக்கறிஞரின் உண்மைப்பெயரையும், மற்றய குழுவிடம் Heidi என்ற பெயரை Hans என ஆண்பெயராகவும் மாற்றிக்கொடுத்தார்.

மாணவர்கள் வழக்கைப் படித்த பின்னர், வழக்கை வெற்றிகண்ட வழக்கறிஞரின் அலுவலகத்தில் பணி புரிவார்களா என கேட்டார். பெண்ணென அறிந்த மாணவர்கள் அவரை வஞ்கமான முதலாளியாகவும், தன் எல்லையை மீறி நடப்பதாகவும் தெரிவித்து அவருடைய அலுவலகத்தில் பணி புரிய மறுத்தனர். அதே வழக்கை ஆண் வழக்கறிஞர் செய்ததாக நம்பிய மாணவர்கள் Hans ஒரு திறமையான, துணிந்த முதலாளியென கூறி அவரிடம் பணிபுரியவும் விரும்பினர். தொழில்வழியே வெற்றிபெற்ற ஆண்கள் சமுதாயத்தால் மிகுந்த வரவேற்பை பெறுகையில், பெண்களுக்கு அத்தகைய வரவேற்பு கிடையாது என்பதற்கு இதுவே சாட்சி.

பெண்கள்மீதான அழுத்தம் இவ்வண்ணம் இருக்க, இன்றைய சமுதாயத்தில் ஆண்களுள்ளும் அழுத்தம் வேறொரு முறையில் உள்ளது. இங்கே “Toxic Masculinity“ என்னும் விசத்தனமான ஆண்மை ஆணினத்தை உள்ளிருந்து வருத்துகிறது. Hollywood நடிகர் Justin Baldoni: „ஆணாக பிறந்ததால் எனது வாழ் நாள் முழுதும் நான் நடித்தவணணம் உள்ளேன்! சமுதாயம் ஆணெனும் தரத்தைக் குறிப்பிட, அதற்கு நிகராவதற்கு தவிக்கிறோம். இதனால் ஆண்மை எமக்குள் விசமாகக் கடைகிறது” என்கிறார்.

Baldoni சொன்னதை குறிப்பிட ஒரு எடுத்துக்காட்டு: புலம்பெயர்ந்து வரும் தமிழ்த் தந்தைமார் பலர், ஈழத்தில் மிக உயர்ந்த தொழில்களை செய்து, வெளிநாடுகளில், தம் கல்விக்கு பொருந்தாத, வருவாய் குறைந்த தொழில்களையே செய்கின்றனர். இந்த மனவருத்தத்தை இவர்கள் வெளிப்படையாகப் பேசுவதில்லை. காரணம் ஆண்கள் குடும்பத்தை காக்கும் சிரமங்களைச் சொல்வதை சமுதாயம் கோழைத்தனம் என்கின்றது. சமுதாயத்தின் சட்டங்களை மறுக்காதிருக்க, குடி, போதை, ஆக்ரோசம் போன்ற வழிகளில் உணர்வுகளிலிருந்து தப்புகின்றனர்.

ஆண்கள் சந்திக்கையில் ஏனைய பெண்களைப் பற்றி தவறாக பேசுவதையும், பெண்களிடம் தவறாக நடப்பதையும், ஆணுக்கு ஆண் கண்டிக்காமல் இருப்பது கற்பழிப்பு போன்ற செயல்களை ஆதரிக்கிறது (Baldoni 2018).

இது “Toxic Masculinity“ என பாலினவிஞ்ஞானத்தில் குறிக்கபடுவதின் இன்னொரு பக்கம் ஆணும் பெண்ணும் பறவையின் இரு இறக்கைகள் போல. இரு இறக்கைகளும் சமனான முறையில் பறந்தால் மட்டுமே பறவையால் பறக்க முடியும். இல்லையெனில் பறவையால் உயரமுடியாது. (Abdul’L ‘Beha) ஆண் மையிலே அழகாக இருப்பதால் ஆணாகப் பிறப்பதே சிறப்பென, தமிழர் நாம் மூட நம்பிக்கையால் சமநிலையின்மை மேலும் ஆதரிக்கிறோம். மானிட வாழ்விற்கு இந்த உதாரணம் பொருந்துமா?

851 total views, 2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *