மலையக மக்களின் வலியும்,வாழ்வும் ஓவியக்கண்காட்சி மலையக மக்களின் வாழ்வுக்கு வலுச்சேர்க்கும்!

(இலங்கையில் பருத்தித்துறை,தெல்லிப்பளை, கிளிநொச்சி,மட்டக்களப்பு, ஹட்டன் ஆகிய 5 நகரங்களில்)
ஓவியங்கள் தற்போது குறைந்து, அதற்கு பதிலாக ( AI ) செயற்கை நுண்ணறிவு ஓவியம் படைக்கும் காலத்தில் ஓவியர் கே.கே.ராஜா முன்னெடுக்கும் இந்த ஓவியக்கண்காட்சி, போற்றுதலுக்கு உரியது. மனித மனங்களின் நேரடிப்பதிவாக, உணர்வின் ஊற்றாக இந்த ஓவியக்கண்காட்சி அமைகின்றது. புலம்பெயர்ந்து வாழும் மக்கள் மலையகம் பற்றி சிந்திக்கும் ஒரு வேளையாக, மலையகம் 200 அமைகின்றது. இந்த எண்ணம் தொடரவேண்டும். எம்மக்கள் என்ற உணர்வுடன், எமது பயணம் எதிர்காலத்தில், மலையக மக்களின் கஷ்டங்களுக்கு கரம் கொடுக்கும். என்ற நம்பிக்கையை இந்த மலையக மக்களின் வலியும்,வாழ்வும் ஓவியக்கண்காட்சி ஏற்படுத்தும் என நம்பலாம்.
மலையக மக்களின் வலியும் ஓவியப்போட்டியில் முதல் மூன்று இடங்களையும் பெற்றவர்கள்.
முதல் இடம்: திரு.து.தங்கேஸ்வரன் புசல்லாவை, இரண்டாம் இடம்:திருமதி.R.K.S.கூரோ பேராதனை,மூன்றாம் இடம்:திருமதி.ஹமீரா ரஜீவ் அக்கரைப்பற்று.
மகாஜனக் கல்லூரி – தெல்லிப்பழை
லண்டன் விம்பம். நடாத்தும் மலையகம் 200ஐ முன்னிறுத்தி ஓவியக்கண்காட்சி இன்று 20.10.2023 தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியில் ஆரம்பமானது. இந் நிகழ்வில் வலிகாம வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் சு.ஸ்ரீகுமரன் (இயல்வாணன்) அவர்கள் கண்காட்சியை ஆரம்பித்து வைத்தார். திரு.கரவைதாசனால் ஒழுங்கு செய்யப்பட்ட பார்வையாளர்களுடன், கவிஞர் கருணாகரன், திரு.ரஜாகரன், கவிஞர் சபேசன், ஆகியோருடன் விம்பத்தின் சிற்றேடு திரு முருகவேல் அவர்களால் வெளியிடப்பட்டது. இந் நிகழ்வை கல்லூரி அதிபர்,ஆசிரியர்கள், மாணவர்கள், பெற் றோர்கள் அனைவரும் கண்டு மகிழ்வுற்றனர்.
ஹாட்லி கல்லூரி – பருத்திதுறை
22.10.2023 ஞாயிறு பருத்திதுறை ஹாட்லி கல்லூரியில் இக்கண்காட்சி இடம் பெற்றது.பிரதம விருந்தினராக ஹாட்லி கல்லூரி முன்னாள் அதிபர் ஸ்ரீபதி முருகுப்பிள்ளை அவர்களும்,இன்றைய அதிபர் திரு.த.கலைச்செல்வன், ஹாட்லி கல்லூரி சித்திர ஆசிரியர் திரு.சுதேஷ் கிருஷ்ணபிள்ளை ஆகியோருடன் மாணவர்கள் கலையாவலர்கள் பலர் கலந்து சிறப்பித்தனர். தாயகத்தில் வெற்றிமணியின் செயற்பாட்டாளர்கள்,திரு.தெய்வேந்திரன்.திருமதி.சாந்தி தெய்வேந்திரன் ஆகியோர் கலந்து, மகிழ்ந்தனர்.
போட்டியில் வெற்றி பெற்ற படைப்பாளிகளுக்கு பரிசளிப்பு நிகழ்வும், ஓவியக்கண்காட்சியும், நூல் அறிமுக, விமர்சன, கலந்துரையாடல் நிகழ்வுகளும் இடம்பெற்றன. இலங்கையில் பருத்தித்துறை,தெல்லிப்பளை, கிளிநொச்சி,மட்டக்களப்பு, ஹட்டன் ஆகிய 5 நகரங்களில் 10 நாட்கள் நடைபெற்றன.