விடியல் திரைப்படம்

-மாதவி
தாய்மண்ணில் நல் படைப்பாளர்களாக, இருந்தவர்கள்,அறிவாளர்கள்,பலர் புலம் பெயர்ந்து,மொழி புரியா நாடுகளில், வெங்காயம் உரித்து,சமையல் செய்து 26 வருடம் தங்கள் கனவுகளையும், தங்களது தளங்களையும், தொலைத்து பட்டமரமாகி, அதிலும் துளிர் விடும் ஆசைகள், கனவுகளுடன் காய்ந்தும் கரைந்ததும், போகும், அன்றைய இரு இளைஞர்களின் கதை விடியல். இன்று வயது முதிர்ந்து முதியவராய், வேலை செய்யும் இடத்தில், மாடகவும் தம் அளவில் மகான்களாகவும், இருந்து, இறுதியில் விறகாகி, ஒரு விடியலுக்கு காத்திருக்கும் படம். எழுத்து, இயக்கம். க.ஆதவன், தா.பாலகணேசன், அரவிந் அப்பாத்துரை.
பல தத்துவங்கள் வருகின்றது, அவை வந்து போகவில்லை, எம் மனதில் விதைக்கப்படுகின்றது.
ஒரு எலிக்கதை.
மண்ணில் பொந்துக்குள் தலைவைத்து எலி தேடியவன். கனநேரம் அப்படி இருக்க. ஓடி போய் அவன் காலை இழுத்தால், அவன் தலையைக் காணோம். அவனுடன் வந்தவனுக்கு ஒரு சந்தேகம், அவர் வேட்டைக்கு வருபோதே அவனுக்கு தலை இருந்ததா? சரி அவன் மனைவிக்கு தெரிந்திருக்கும் கேட்போம், என்று அவன் மனைவியிடம், உன் கணவன் வேட்டைக்கு வரும்போது தலை இருந்ததா? அவள் தனக்கும் நினைவு இல்லை, ஆனால், அவருக்கு தொப்பி என்றால் நல்ல விருப்பம். எப்பவும் எங்கு கண்டாலும் தொப்பிகள் வாங்குவார். இப்படி ஒரு தத்துவம் நகர இன்னும் ஒன்று தத்துவ ஞானிகள் பற்றி.
தத்துவ ஞானிகள் உண்மையை பாதுகாக்கும் நாய்கள். அதாவது உண்மை, வெளியே வராமல் பார்க்கும் நாய்கள் தத்துவ ஞானிகள் என்கிறார். இப்படி பல விதைகள் விதைக்கப்படுவதை, இந்த விடியலில் காணலாம்.
ஒளிப்பதிவு கமரா முகத்துக்கு வைக்கப்படவில்லை. அங்கு நடக்கும் சம்பவங்களுக்கு வைக்கப்பட்டு இருந்தது. மனித முங்களைவிட பொருட்கள் பல பொருள்கள் சொல்ல, இந்தக் கமார எல்லா மொழியும் பேசியது. சில காட்சிகள் நீண்டு இருந்தது. ஆனால் அதனால் ஏற்படும் சலிப்பு கதாபாத்திரங்களின் வாழ்க்கை சலிப்போ என எண்ணவைத்தது.
மொத்தத்தில் பல பொருள் தரும் ஒரு படம். ஒரு படத்தை நீங்கள் பார்த்தபின் எல்லோருக்கும் ஒரே படமாக தெரியாது.பல கதைகளாக ஒவ்வொருவருக்கும் இது விரியும்.அதனால் இந்த விடியல் பலருக்கு பல விடியலைக் கொடுக்கும் என நம்பலாம்.பார்க்கவேண்டிய படம். உங்களை நீங்களும், அங்கு அடிக்கடி கண்டுகொள்வீர்கள்.காரணம் இது புலம்பெயர்ந்து வாழும் உங்கள் கதை..விடியல் திரைப்படம் விரைவில். காத்திருங்கள்.