ஒரு மெழுகுதிரியில் பலகோடி மதிப்பான Businessஆ?
- சிவவினோபன் யேர்மனி
காலக் கட்டத்தில் மெழுகுதிரிகோட்டு வரைபட அமைப்பினை அவதானிப்பது எப்படி என்று, இன்று பார்க்க இருக்கின்றோம்.
கடந்த டிரேடிங் பற்றிய கட்டுரையின் வரவேற்புக்கு மிகுந்த நன்றிகள். இன்று அந்த டிரேடிங்கின் இரண்டு அடிப்படை அத்திவாரங்களை கற்றுக் கொள்ளப் போகின்றோம். இந்த அத்திவாரங்கள் உறுதியாக இருந்தால், அடுத்து அதற்கு மேல் கட்டடங்கள் கட்ட இலகுவாக இருக்கும். முதலாவது அத்திவாரம் மெழுகுதிரி கோட்டு அட்டவணை வரைபடம். இதை ஆங்கிலத்தில் ஊயனெடநளவiஉம ஊhயவ என்று சொல்லப்படும். இதை மட்டும் தெளிவாக தெரிந்து கொண்டாலே போதும் நாம் டிரேடிங்கை முழுமையாக புரிந்து கொண்டு விட்டோம் என்று அண்ணளவாக சொல்லலாம். ஏனென்றால் இதுதான் ஆரம்ப அத்திவாரம்.
இதோ இங்கு தெரிகின்ற புகைப்படத்தில் இருக்கின்ற இந்த பச்சை சிவப்பு மெழுகுதிரிகள் போன்று இருக்கின்ற இந்த அட்டவணையை தான் நான் கூறுகின்றேன். இது கருப்பு வெள்ளை படத்தில், வெள்ளை கருப்பு மெழுகுதிரிகளாகவும், வர்ணப் படத்தில், பச்சை சிகப்பு மெழுகுதிரிகள் ஆகவும் இருக்கின்றது. முதலில் வர்ணத்துடைய அர்த்தத்தை பார்ப்போம். பச்சை அல்லது வெள்ளை நிற மெழுகுதிரி உடைய அர்த்தம், அந்த மெழுகுதிரி மேல் நோக்கி வளர்கின்றது என்று அர்த்தம். இதை வணிக ரீதியாக பார்த்தோம் என்றால், ஒரு நிறுவனத்தின் வளர்ச்சி மேல் நோக்கி இருக்கின்றது, அந்த நிறுவனம் முன்னேறிக் கொண்டு இருக்கின்றது என்பதை பச்சை அல்லது வெள்ளை நிற மெழுகுதிரிகள் குறித்து காட்டுகின்றது. இதுவே கருப்பு அல்லது சிகப்பு நிற மெழுகுதிரி உடைய அர்த்தம், அந்த நிறுவனம் ஏதோ ஒரு காரணத்தால், கீழ்நோக்கி இறங்கி கொண்டிருக்கின்றது, அதாவது அந்த நிறுவனத்தின் வளர்ச்சி குறைவடைந்து கொண்டிருக்கின்றது, மக்கள் மத்தியில் அந்த நிறுவனத்தின் நம்பிக்கை தன்மையோ அல்லது வணிக ரீதியாக அந்த நிறுவனத்தின் வருமானமும் குறைந்து கொண்டிருக்கின்றது என்பதை குறித்து காட்டும் விதமாக இந்த மெழுகுதிரிகள் அமைந்திருக்கின்றது. இந்த அடிப்படை விடயம் கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும்.
இந்த அடிப்படை விடயம் புரிகின்றதா? இப்போது அந்த மெழுகுதிரி கோட்டு அட்டவணையில், ஒரு மெழுகு திரியை எடுத்து அதன் முழுமையான அர்த்தத்தை புரிந்து கொள்வோம். உதாரணத்திற்கு இந்த பச்சை மெழுகு திரியை எடுத்துக் கொண்டால், இதில் நான்கு பகுதிகள் இருக்கின்றது அதை விரிவாக புரிந்து கொள்வோம். முதலில் மெழுகு திரியின் ழு (Open) என்று போடப்பட்டிருக்கின்ற இந்தப் பகுதி, இதுதான் மெழுகு திரி எப்போது ஆரம்பம் ஆனது என்பதை குறித்து காட்டுகின்றது. உதாரணத்திற்கு ஒரு நிறுவனத்தின் பங்கு உடைய விலை 100 ரூபாயில் ஆரம்பித்து வளர்ந்து கொண்டே செல்கின்றது என்பதற்கான அர்த்தம் பச்சை நிற மெழுகு திரியாக இருக்கின்றது என்பது. அது வளர்ந்து கொண்டே சென்று காலகட்டம் ஐந்து நிமிடங்கள் என்று எடுத்துக் கொண்டோம் என்றால், மூன்றாவது நிமிடத்தில் 150 ரூபாயாக மாறி, அதன்பின்பு அது விழுந்து கொண்டு வந்து நான்காவது நிமிடத்தில் 50 ரூபாயாக மாறி, மீண்டும் எழுந்து கொண்டு வந்து ஐந்தாவது நிமிடத்தில் 120 ரூபாயில் முடிந்திருந்தால், பாருங்கள் ழு (open) என்று போடப்பட்டிருப்பது ஆரம்ப புள்ளி ஊ (close) என்று போடப்பட்டிருப்பது முடிவு புள்ளி இதில் மேலே ஒரு கோடு போடப்பட்டிருக்கின்றது, அதன் அர்த்தம் இந்த ஐந்து நிமிட காலகட்டத்தில் எவ்வளவு தூரம் உயரம் சென்றது என்பது, கீழே இருக்கின்ற கோட்டின் அர்த்தம் இந்த ஐந்து நிமிட காலகட்டத்தில் எவ்வளவு தூரம் கீழே சென்றது என்பதும் தான் அர்த்தமாக இருக்கின்றது. இதில் மேல்கோடு இல்லாமல் வருவதற்கு வாய்ப்பிருக்கின்றது கீழ்க்கோடு இல்லாமல் வருவதற்கு வாய்ப்பு இருக்கின்றது இரண்டு கோடுகளும் இல்லாமல் மெழுகுதிரி அமைந்திருப்பதற்கும் வாய்ப்புகள் இருக்கின்றது. அதை தனியாக பார்ப்போம். இன்றைய இந்த இடத்தில் நாம் மிக முக்கியமாக புரிந்து கொள்ள வேண்டிய விடயம் ஒரு மெழுகு திரியின் கீழ் மெழுகு ஆரம்ப புள்ளி மேல் மெழுகு முடிவு புள்ளி மேல் திரி எவ்வளவு தூரம் உயரமாக வியாபாரம் செய்யப்பட்டது, கீழ் திரி எவ்வளவு தூரம் அந்த நிறுவனத்தின் வியாபாரம் வீழ்ச்சி அடைந்தது என்பதை குறித்து காட்டும். இதே போன்றுதான் சிகப்பு மெழுகுதிரியும், ஒரே ஒரு வித்தியாசம், சிவப்பில் ழு (open) மேலும் ஊ (close) கீழும் இருந்தால் நிறுவனம் விழுந்துகொண்டுருக்கிறது என்று அர்த்தம். ஆகவே சிவப்பாக அமையும்.
அடுத்தது காலகட்டம் இது இரண்டாவது அத்திவாரம். காலகட்டம் என்றால் இந்த மெழுகுதிரி ஒரு நிமிடத்தில் வளர்ந்த வளர்ச்சியை பார்ப்பது, அல்லது இரண்டு நிமிடத்தில் வளர்ந்த வளர்ச்சியை பார்ப்பது, ஐந்து நிமிடம், ஒரு மணித்தியாளம், ஒரு நாள், ஒரு வாரம் என்று இந்த வளர்ச்சியை நாம் ஒரு மெழுகுதியாக மாற்றிப் பார்க்கும் காலத்தை, காலகட்டம் என்று சொல்லுவார்கள். ஆங்கிலத்தில் வுiஅந குசயஅந என்று கூறப்படுகின்றது. இந்த இரண்டு விடயங்களும் தெரிந்திருந்தால், இதில் சந்தேகம் இல்லாமல், கசட கற்றிருந்தால் நீங்கள் தைரியமாக டிரேடிங் செய்ய ஆரம்பிக்கலாம். அடுத்த தொடரில் உங்களில் எத்தனை பேர் கற்க கசடற கற்றுள்ளீர்கள் அல்லது சந்தேகங்கள் ஏதாவது இருக்கின்றதா என்று, உங்களுடைய கருத்தை எங்களுக்குத் தெரிய தாருங்கள். சந்தேகங்கள் எதுவும் இல்லை என்றால், வருகின்ற தொடரில் நாம் டிரேடிங்க்குள் காலடி எடுத்து வைத்து நகரத் தொடங்கப் போகின்றோம். நீங்கள் சொந்த முதலாளியாக மாறலாம், யாருடைய உதவியும் இல்லாமல் உங்கள் வீட்டில் இருந்து கொண்டே, வேலை செய்ய ஆரம்பிக்கலாம்.
716 total views, 9 views today