ரஜினியின் பாட்ஷா ரீமேக்கில் அஜித்
ரஜினியின் சினிமா வாழ்க்கையில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் அவர் நடித்த பாட்ஷா முக்கியமான படம். இந்த படம் ரஜினி ரசிகர்களுக்கு மட்டுமின்றி ரஜினிக்கும் தான் நடித்ததில் மிகவும் பிடித்த படம் என்பது குறிப்பிடத்தக்கது. கேங்ஸ்டர் கதையில் உருவான இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிப்பதற்கு ரஜினியை சுரேஷ் கிருஷ்ணா தொடர்பு கொண்ட போது, ஒரு பாட்ஷாவே போதும், இரண்டாம் பாகம் வேண்டாம் என்று சொல்லி நடிப்பதற்கு மறுத்து விட்டார். இந்த நிலையில் பாட்ஷா படத்தை ரீமேக் செய்ய திட்டமிட்டு வருகிறார் சுரேஷ் கிருஷ்ணா. அந்த படத்தில் நாயகனாக விஜய்- அஜித் இருவரில் ஒருவரை நடிக்க வைக்க அவர் திட்டமிட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வந்தன. இந்நிலையில் சமீபத்தில் பாட்ஷா ரீமேக்கில் நடிக்கப் போவது விஜய்யா? அஜித்தா? என்று அவரிடத்தில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, ரஜினியின் பில்லா என்ற கேங்ஸ்டர் படத்தில் நடித்தார் அஜித்குமார். அந்த ரீமேக் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்தது. அதனால் பாட்ஷாவாக நடிப்பதற்கும் அவர்தான் பொருத்தமாக இருப்பார் என்று கூறியுள்ளார். அதனால் ரஜினியின் பில்லாவை தொடர்ந்து பாட்ஷா படத்தின் ரீமேக்கிலும் அஜித்குமாரே நடிப்பார் என்பது தெரியவந்துள்ளது.
அட்லி படத்தில் விஜய் -ஷாருக்கான்?
அட்லியின் அடுத்த திரைப்படத்தில் விஜய் மற்றும் ஷாருக்கான் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளதை அடுத்து இந்த படம் உருவானால் 2000 கோடி வசூலாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.தளபதி விஜய் நடித்த தெறி, மெர்சல் மற்றும் பிகில் ஆகிய மூன்று படங்களை அட்லி இயக்கி உள்ளார். அதேபோல் ஷாருக்கான் நடித்த ஜவான் திரைப்படத்தையும் இயக்கியுள்ளார்.இந்த நிலையில் தனது அடுத்த படத்தில் விஜய் மற்றும் ஷாருக்கான் ஆகிய இருவரையும் இணைந்து நடிக்க வைக்க முயற்சி செய்து கொண்டிருப்பதாகவும் இருவரும் சரியான கதை இருந்தால் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறதாக தெரிவித்தார்.எனவே எனது அடுத்த படம் விஜய் மற்றும் ஷாருக்கான் இணைந்து நடிக்கும் படமாக தான் இருக்கும் என்றும் அட்லி பேட்டியில் கூறியுள்ளார். இது மட்டும் நடந்தால் இந்திய திரையுலகில் மிகப்பெரிய வசூலை வாரி குவிக்கும் படமாக இருக்கும் என்று திரை உலக வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்தியன் 2 உடன் மோதும் கங்குவா
கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படம் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் வெளியாகவில்லை.இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகளை வைத்து பார்த்ததில் படத்தை இரண்டு பாகங்களாக வெளியீடு செய்யலாம் என்ற முடிவை படக்குழுவினர் எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதனால் மேலும் சில காட்சிகளை படமாக்க வேண்டியுள்ளதாம். அந்த படப்பிடிப்பு முடிந்தபின்னர்தான் வெளியீட்டு வேலைகள் தொடங்கும் என தெரிகிறது.இந்நிலையில் இந்தியன் படத்தின் 2 ஆம் பாகம் ஏப்ரல் 14 ஆம் திகதி வெளியாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. அதே திகதியைத் தான் சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா திரைப்படம் குறிவைத்து உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தன் படத்தை இயக்காத இயக்குனருக்கே
அப்போ கார் வழங்கியவர் ஜெயசங்கர்.
நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் ஒருநாள் தனது மனைவி மற்றும் மகனுடன் பைக்கில் செல்வதை ஜெயசங்கர். பார்த்தார். அப்போது அவர் எஸ்.ஏ.சந்திரசேகரை அழைத்து என்னிடம் உள்ள கார்களில் ஏதாவது ஒன்றை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறினார். ஆனால் இலவசமாக நான் காரை பெற மாட்டேன் என்று எஸ்ஏ சந்திரசேகர் கூறியதை அடுத்து, ‘உங்களால் எப்போது பணம் கொடுக்க முடியுமோ அப்பொழுது கொடுங்கள் அல்லது தவணை முறையில் கூட கொடுங்கள்’ என்று கூறி தன்னுடைய விலை உயர்ந்த காரை எஸ் ஏ சந்திரசேகருக்கு கொடுத்தார். விஜய்யின் தந்தைக்கு அந்த காலத்தில் கார் கொடுத்தார் என்றால் அது ஜெய்சங்கர் தான இந்த நிலையில் நடிகர் ஜெய்சங்கர் 2000ஆம் ஆண்டு ஜூன் 3ஆம் தேதி திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக தனது 61வது வயதில் காலமானார்.
699 total views, 6 views today