வெற்றிமாறன் இயக்கத்தில் பட்டையைக் கிளப்பும் தல!

தேசிய விருது இயக்குனர் வெற்றிமாறன், நாயகனே சராசரி மனிதன் போல் காட்டி அசாதாரணமாக சிந்திக்க வைத்து எதிரிகளை துவம்சம் செய்து சமூகத்திற்கு கண்டிப்பாக ஒரு செய்தி கொடுத்து விடுவார். இவரது இயக்கத்தில் வெளிவந்த ஒவ்வொரு படமும் சமூகத்தின் பேசும் பொருளானது உண்மையே. தனக்கென தனி தன்மையுடன் வெற்றி இயக்குனராக வலம் வரும் வெற்றிமாறன், தனுஷ் உடன் தொடர்ச்சியாக பல முன்னணி வெற்றி படங்களை கொடுத்துள்ளார். முதன்முறையாக அஜித்துடன் யுமு 64 இல் இணைய இருப்பது ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா ஆர்வலர்கள் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. வெற்றிமாறன் அவர்கள் மங்காத்தா படத்திற்கு முன் அளித்த பேட்டியில் அஜித் சார், “எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தன்னைத்தானே செதுக்கியவர். யாருக்கும் எதற்காகவும் பயப்பட மாட்டார். இவரை போல மனசுல பட்டத அப்படியே சொல்ற தைரியம் வேற யாருக்கும் கிடையாது” என்று புகழ்ந்திருப்பார். உண்மைதான் சினிமா பிரபலங்கள் பலரும் தன் மனதில் உள்ளவற்றை அப்படியே வெளிக்காட்டுவதில்லை. இந்த பிம்பத்தை உடைத்தெறிந்த அஜித்திற்கு தகுந்தவாறு இரண்டு கதை தயார் செய்து வைத்திருந்தார் வெற்றிமாறன். இதில் ஒரு கதை விஜய்க்காக தயார் செய்தார். இரண்டு கதையும் அஜித்கு சரி என்று வெற்றிமாறன், முடிவு செய்துள்ளார்.
5வது முறையாக அஜித் உடன் ஜோடி சேரும் திரிஷா!
துணிவு படத்திற்கு பிறகு அஜித் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு மீண்டும் அஜர்பைசானில் துவங்கி இருக்கிறது. இதில் அஜித்- திரிஷா ஜோடி ஐந்தாவது முறையாக இணைந்துள்ளனர். ஆனால் ஒரு படத்தில் கூட அவர்கள் இருவரும் கடைசியில் இணைவதாக கதை அமையவில்லை. ஆனா இப்போது விடாமுயற்சி படத்தில் 5-வது முறையாக இணைந்து இருக்கும் இந்த ஜோடியை படத்தின் இயக்குனர் மகிழ்திருமேனி இருந்தியில் இணைக்க வேண்டும் என்பது தான் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பு. இதற்கு முன்பு இவர்கள் நடித்த படங்களில் எல்லாம் தொடக்கத்தில் காதலிப்பதாக மட்டுமே பார்க்க முடிந்தது. கடைசியில் இவர்கள் இணைவது போல் காட்டவே மாட்டார்கள். இது விடாமுயற்சியில் நடக்கவே கூடாது. இந்த முறையாவது அஜித்- திரிஷா இருவரையும் இணைக்கும் படி தல ரசிகர்கள் ஆசைப்படுகின்றனர்.