கவிதா லட்சுமி.

கவிதா லட்சுமி தன்பெயரையே தனித்துவமாக, தன்னைத்தானே சுயமாகச் செதுக்கி வருபவர்.
கவிதா லட்சுமி என்று வாசித்தால், அல்லது கேட்டால் போதும். எமது கண்முன்னே வந்து நிற்பது, அவர் கலை மீதி கொண்டுள்ள பற்று. அவர் கலையை மட்டும் வளர்க்கவில்லை, கலா ரசிகர்களின் இரசனையையும் உயர்ந்த இடத்திற்கு எடுத்துச் செல்கிறார்.
பரதம், கவிதை, கட்டுரை, சித்திரம் என நான்கு தளத்திலும், சொன்னதையே திருப்பி திருப்பி ஒப்படைக்காத தன்மை கவிதா லட்சுமியின் சிறப்பு என்று துணிந்து கூறலாம்.
பரீட்சாத்தியமாக பல முயற்சிகளை செய்தவண்ணம் உள்ளவர். நோர்வே நாட்டில் கலாசாதனா என்ற நடன பள்ளியை நிறுவி பல மாணவர்களை பரதக்கலையில் வளர்த்து வருபவர். இவருக்கு கிடைத்த பெரும் கொடை, அவருக்கு கிடைத்த, கிடைக்கும் மாணவர்கள்.
பல சிறப்புகளுக்கு சொந்தக்காரி யான பல்கலை வித்தகியாக விளங்கும் கவிதா லட்சுமி அவர்களை
வெற்றிமணி பத்திரிகையின் பங்குனி மாத பெண்கள் தின சிறப்பிதழின் கௌரவ ஆசிரியராக வெற்றிமணி கௌரவித்து மகிழ்கிறது.
என்றும் தமிழுடன்
மு. க. சு. சிவகுமாரன்.