ஆரம்பிக்கலாமா?

கௌசி.யேர்மனி.
தமிழா தமிழனா?
காலச்சக்கரத்திலே தமிழ் தளைத்தோங்குகின்றது என்பது வெள்ளிடைமலை. உலகில் தோன்றிய மொழிகளில் தமிழே முதலில் தோன்றியது என்பதற்கு ஆதாரங்கள் அதிகமாக இருக்கின்றன. இது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக எழுத்திலும் பேச்சிலும் இருக்கும் மொழி. செம்மொழி அந்தஸ்து பெற்றிருக்கின்றது. சிறந்த பல இலக்கியங்கள் தோன்றியிருக்கின்றன. அவை எல்லாம் மனிதன் வாழ்வாங்கு வாழ்வதற்குரிய அறநெறிகளைப் போதிப்பனவாக இருக்கின்றன. துறவை எடுத்துரைக்க மணிமேகலை, மண்ணாசையால் ஏற்படும் தீமையை எடுத்துரைக்க மகாபாரதம், கற்புக்குச் சிலப்பதிகாரம், ஆன்மீக அற்புதங்களுக்கு தேவாரம், திருவாசகம், திருவருட்பா இவ்வாறு பல இலக்கியங்கள் தமிழில் தோன்றித் தமிழின் பெருமையை எடுத்துக்காட்டுகின்றன. அறநெறி போதித்து மனிதனை நன்னெறியில் இட்டுச் செல்வன. ஆயினும் உலக அரங்கில் தமிழனின் கண்டுபிடிப்புக்கள் எத்தனை? தமிழின் பெருமையயைக் கூறுகின்ற ஊடகங்கள் வடிவமைப்பில் தமிழரின் பங்களிப்பு எப்படி இருக்கின்றது? இவை சிந்தித்துப் பார்க்க வேண்டிய ஒரு விடயமாக இருக்கின்றது.

அன்று தமிழைக் கற்றவர்கள்; கவி பாடி மன்னர்களிடம் பரிசில்கள் பெற்றுச் சென்றார்கள். கவிபாடிப் பரிசில்களைப் பெற்றவர்களே இலக்கியங்களைப் படைத்தார்கள். சங்ககாலத்தை எடுத்து நோக்கினால், ஐவகை நிலப்பரப்புக்களிலும் வாழ்ந்த மக்கள் அந்த நிலங்களுக்கேற்பத் தொழில்களைச் செய்தார்கள். குறிஞ்சி நில மக்கள், வேட்டையாடுதல் தினை பயிரிடுதல், திணை காத்தல் போன்ற தொழில்களைச் செய்தார்கள், முல்லை நில மக்கள் இடையர்களாகவும், ஆயர்களாகவும் வாழ்ந்தார்கள், மருதநில மக்கள் உழவுத் தொழிலைச் செய்தார்கள், நெய்தல் நில மக்கள் கடற்றொழில் செய்தார்கள், பாலை நில மக்கள் போர்செய்தல், சூறையாடுதல் போன்ற தொழில்களைச் செய்தார்கள்.

தமிழ் நிலப்பரப்புக்களில் வணிகம் இருந்திருக்கின்றது. பண்டமாற்று இருந்திருக்கின்றது. நெய்தல் நில கடலும் கடல் சார்ந்த பகுதிகளிலும் வாழ்ந்த மக்கள் உப்பைக் கொடுத்து நெல் வாங்கி வந்தமை, தமிழ் நாட்டுக்கு யவனர்கள் வந்து மிளகு போன்ற பொருட்களை வாங்கிச் சென்றமை போன்ற ஆதாரங்களை எடுத்துக் காட்டுவன இலக்கியங்களே. நெய்தல் நில மக்கள், மீன்பிடித் தொழிலைச் செய்ததுடன் கடற்கரையில் உள்ள உவர்நிலத்தில் சிறுசிறு பாத்திகள் அமைத்து, அவற்றில் கடல் நீரினையும், உப்பங்கழி நீரினையும் பாய்ச்சி உப்பு விளைவித்ததை நற்றிணைப் பாடலால் அறியக்கூடியதாக இருக்கின்றது.

~~பெயினே விடுமான் உளையின் வெறுப்பத் தோன்றி
இருங்கதிர் நெல்லின் யாணரஃதே
வறப்பின் மா நீர் முண்டகம் தாஅய்ச்சேறு புலர்ந்து
இருங்கழிச் செறுவின் வெள் உப்பு விளையும்||

இவ்வாறு தொழில்கள் செய்தவர்களின் பெயர்கள் இன்று இல்லை. ஆனால், அத்தொழில்களைப் பாடியவர்களின் பெயர்களே இன்றும் நின்று நிலைக்கின்றன. இவ்வாறு தொழில்களை இலக்கியம் மூலமே அறியக்கூடியதாக இருக்கின்றது. அகழ்வாராய்ச்சி மூலம் அறியப்பட்டாலும் இலக்கியங்களே தெளிவாக இவற்றை விளக்குகின்றன. அவ் இலக்கிய கர்த்தாக்களே இன்றும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அதனாலேயே எல்லாம் அழிந்து போனாலும் புகழ் அழிவதில்லை. எனவே இலக்கியம் படைப்பதனால், பெயரும் புகழும் நிலைத்து நிற்கும் என்பதை அனைவரும் அறிந்திருக்கின்றார்கள். தமிழ் வருமானத்தைத் தருமா? என்ற கேள்வியுடன் உயர்கல்வியை மேற்கொள்பவர்கள் தமிழைத் தவிக்கவிட்டு விடுகின்றார்கள். ஆனால், தமிழ் புகழைத் தரும் என்பதை ஓய்வு நிலையின் போது அறிந்து கொண்டு தமிழைக் கற்று ஆய்வு செய்யத் தொடங்குகின்றார்கள். இதனால், தமிழ் வாழ்கின்றது.

அக்காலத்தில் தமிழ் ஆட்சிமொழியாக இருந்து தமிழ் ஆட்சி செய்த பெருமையை நாம் அறியக்கூடியதாக இருக்கின்றது. ஆனால், அன்று பேசிய தமிழை இன்று புரிந்து கொள்வதற்காக தமிழ் அகராதியைப் புரட்ட வேண்டிய அவசியம் இருக்கின்றது. ஏனென்றால், தமிழில் பல மொழிக்கலப்புகள் எற்பட்டிருக்கின்றன. மணிப்பிரவாள நடையிலே பல தமிழ் இலக்கியங்களை அறியக்கூடியதாக இருக்கின்றன. எனவே தமிழின் வளர்ச்சிக்கு மொழிக்கலப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவே இருக்கின்றது. நாட்டு மொழிகளுடன் சேர்ந்த போத்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அந்த மொழிகளைத் தவிர்க்க முடியாத சூழ்நிலை தமிழுக்கு இருக்கின்றது என்பதை இதற்கு முன் ஒரு கட்டுரையில் வெற்றிமணியில் எழுதியிருந்தேன்.

புகழைத் தருகின்ற எத்தொழிலையும் மேற்கொள்ளலாம். அது இசையாக இருக்கலாம், கலையாக இருக்கலாம். ஆனால், தாய்மொழி ஓய்வு நிலையிலும் கற்கக் கூடியது. அதனால், தமிழின் மேல் தற்போது உலகநாடுகளில் அலாதியான பிரியம் ஏற்பட்டிருக்கின்றது. மொழி என்பது ஒருவருக்கொருவர் தம்முடைய எண்ணக்கருக்களைப் புரிந்து கொள்ளப் பயன்படுத்தும் ஒரு ஊடகமே என்னும் அடிப்படைக் கருத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். திருக்குறளைப் படைத்த திருவள்ளுவர். தற்காலத்தில் எழுதப்பட்ட எதுவுமே புரியாது முழிப்பார் என்பது நிச்சயம். ஏனென்றால், அன்று எழுத்து வழக்கில் இருந்த தமிழ் இன்று இல்லை. அதுவும் கணினி யுகத்திலே கணினி புரிந்து கொள்ளும் மொழியையே தமிழர்கள் பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்கின்றது. ஐ என்னும் எழுத்தை அய் என்றும் பயன்படுத்தலாம். ஒளவை என்பதை அவ்வை என்று எழுதலாம். கோயில் என்பதைக் கோவில் என்று எழுதலாம் என மொழித் திரிவு கையாளப்படுகின்றது.

தமிழின் பெருமையை நாம் அறிந்தோம், அறியச் செய்கின்றோம். ஆனால், தமிழன் என்னும் பெருமையை நிலைநாட்டுவதற்கு அறிவியலிலும், தொழில்நுட்பத்திலும் எமது சிந்தனையைச் செலுத்துவதற்கு நாம் உழைக்க வேண்டும். அந்தத் துறைகளிலே கற்றவர்கள். அதிலே மேலும் என்ன சாதனை செய்யலாம் என்று ஓய்வுநிலையிலும் சிந்தித்துச் செயற்பட்டால், தொழில்நுட்பத்திலும் தமிழன் பெயர் பேசப்படும். வெளிநாட்டு மோகம் புதியதல்ல. அன்றும் மேல்நாட்டு இசையைப் பின்பற்றித் தமிழ் சினிமா பாடல்கள், நடனம் போன்றவை சினிமாவிலே இடம்பெற்றன. ஆனால், இன்று பிரமாண்டம் என்று மேல்நாட்டார்; தொடங்கிய ஆயசஎநட படங்கள் இன்று தமிழ் சினிமாவிலே கொடிகட்டிப் பறக்கின்றன. இசைகளும் ஏதோ ஆங்கில இசையைப் போன்று காதுகளுக்குள் நுழைகின்றன. தற்போது 10 வருடங்களுக்குள் பல மேல்நாட்டினரின் கண்டுபிடிப்புக்களுக்கும் தமிழ்ப் பெயர்கள் வந்திருக்கின்றன. இது மகிழ்ச்சியைக் கொடுக்கும் விடயமாக இருக்கின்றது. றுகைi என்பதற்கு அருகலை, ழடெiநெ இயங்கலை னுநபவையட எண்மின், ணுழழஅ என்பது குவிகம் என்றும் அவற்றிலேயே எம்முடைய தமிழை ஏற்றி நாம் பயணம் செய்கின்றோம். இவ்வாறான சாதனங்களைக் கண்டுபிடிப்பவர்களாக நாம் மாறவேண்டும். அப்போதுதான் தமிழின் புகழுக்கேற்பத் தமிழனின் புகழும் ஓங்கும். அந்நியர்களின் கண்டுபிடிப்புக்களுக்குப் பெயர் வைக்கும் பெருமை எமக்கு இருப்பதுபோல அவற்றைக் கண்டுபிடிப்பவர்களாக நாம் எப்போது மாறப்போகின்றோம். ஆரம்பிக்கலாமா?

425 total views, 6 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *