உங்களுக்கும் சொல்லிவிட்டேன்.

- மாதவி
ஒரு குழந்தை விமானத்தில் விடாமல் அழுகின்றது. கனடாவில் அழ ஆரம்பித்த குழந்தை, தன்னால் முடியாமல் அழுகையை நிறுத்தியது. சற்று இடை வெளி மீண்டும் அதே வீச்சோடு குழந்தை அழுகின்றது. பலருக்கு அழுகை அமைதியைக்குலைக்க, சிலருக்கு, அழுகையில் உதிரம் கொதிக்க, மனிதரும், மிருகமுமாக வானில் பறந்தவண்ண பயணிகள், இருந்தனர்.
தன் குழந்தை, தன் பேரக்குழந்தை என்றால் பயணிகள் மனித மிருக வேறுபாடு இன்றி, குழந்தை மேல் பார்வையைச் செலுத்துவர். கடவுளே இந்தக் குழந்தை நித்திரை கொள்ள வேண்டும் என்றும் வேண்டுவர். எனது ஆசனத்தின் பின் ஆசனத்தில் குழந்தை அழுதபடி இருந்தது.
ஒரு செக்கன் அழுகை நிற்க, என் தோளில் கடவுளின் பூவிரல்கள் பட இரண்டு ஆசனங்களுக்கும், இடையால் பார்த்தேன். குழந்தை விரல்களால் என் முதுகில் வருட, குழந்தையின் தந்தை ஒரு சிறு பொற்கிழியை நீட்டினார். அதனை பெற்று திறந்து பார்த்தால் பட்டுப் பையில் ஒரு துண்டில் இப்படி எழுதப்பட்டு இருந்தது.
‘வுhயமெiபெ கழச வசயஎநடடiபெ றiவா அந லுழரச ளுpநஉயைட நெநனள கசநைனெ’
என்னுடன் பயணிப்பதற்கு நன்றி உங்கள் சிறப்பு தேவை நண்பர், என் குழந்தை விமானத்தில் அழுகின்றது, உங்களுக்கு நிச்சயம் இடையூறாக இருக்கலாம். தயவு செய்து மன்னிக்கவும். என்று சொல்லி அமர்ந்தார். தந்தை விமானப்பணத்தில் குழந்தை அழுதால், என முன் ஏற்பாட்டுடன் கொண்டுவந்து, ஆசனத்தில், நேரே முன் பின் இருக்கும் ஆறு பேருக்கும் கொடுத்தார்.அதனைப் பெற்ற ஆறு பேரும் ஒரு முறை திரும்பி, அக்குழந்தையைப் பார்த்தார்கள்.
அந்தக்கனிவான பார்வையில் குழந்தை சிரித்தது, அதன் பின் குழந்தை அழவே இல்லை.
குழந்தை கடவுளைக்கண்டதா அல்லது கடவுள் குழந்தையைக் கண்டாதா.மனதுக்குள் ஒரே குழப்பம் விமானம் தரை இறங்கி இமிக்கிறன்ரில் வரிசை கட்டி நிற்கும் போது, அதே குழந்தை என்னைப் பார்த்து சிரித்தது.
புட்ட பதியில் ஆயிரம் பேர் இருக்க பாபா தன்னைக்கூப்பிட்டு வீபூதி தந்தார் என்று சொல்வார்கள் பலர்.
இங்கே பாப்பா என்னைப்பார்த்து சிரித்ததை நானும் பலரிடம் சொல்லப்போகின்றேன்.
உங்களுக்கும் சொல்லிவிட்டேன்.