ரணில் என்ன செய்யப்போகிறார்?
ஆர்.பாரதி
கொழும்பில் தன்னுடைய தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்திருக்கின்றார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. ,தன்மூலம் ,ரண்டு செய்திகள் சொல்லப்பட்டிருக்கின்றது. ஒன்று, ஜனாதிபதித் தேர்தலுக்கு ரணில் தயாராகின்றாh் என்பது. ,ரண்டாவது, தனியான ஒரு தோ்தல் அலுவலகத்தைத் திறந்திருப்பதன்மூலம் ஐ.தே.க. சாh்பில் ரணில் போட்டியிடப்போவதில்லை என்பதும் உணா்த்தப்பட்டுள்ளது.
அதாவது கட்சி சார்பாக ஒரு சுயாதீக வேட்பாளராகவே அவா் களமிறங்கப்போகின்றாh் என்பதும் ,தன் மூலம் உணர்த்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் ,ந்த நகர்வுகள் குறிப்பிட்ட காலப்பகுதியில் தேர்தல் நடைபெறும் என்பதை உறுதிப்படுத்துகிறதா என்று கேட்டால் எதிர்க்கட்சிகள் அதில் ,ப்போதும் சந்தேகத்தையே தெரிவிக்கின்றன. “தோ்தல்கள் பின்போடப்படுவதற்கான வாய்ப்புக்கள் ,ல்லை என்று சொல்லிவிட முடியாது” என்பதுதான் எதிh்க்கட்சிகளின் கருத்தாக ,ருக்கின்றது.
அவா்கள் ,வ்வாறு கூறுவதற்கு ,ரண்டு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.
முதலாவது, ஐ.தே.க. பொதுச் செயலாளா் பாலித ரங்கே பண்டார சில வாரங்களுக்கு முன்னா் வெளியிட்ட அறிவிப்பு. “ஜனாதிபதித் தோ்தலும், பொதுத் தோ்தலும் ,ரண்டு வருடங்களுக்கு பின்போடப்பட வேண்டும்” என்ற கருத்தை அவா் முன்வைத்தாh். “தற்போதைய பொருளாதார நெருக்கடி முடிவுக்கு வந்து சுமூகமான ஒரு நிலை ஏற்பட்ட பின்னா் தோ்தல்களை நடத்துவதே நாட்டுக்கு நல்லது” என்றவகையில் ,தற்கு அவா் விளக்கமும் கொடுத்திருந்தாh்.
ஐ.தே.க.வைப் பொறுத்தவரையில் பொதுச் செயலாளா் பதவி என்பது சக்தி மிக்கது. முக்கியமான – பொறுப்பான பதவியும் கூட. ,வ்வாறான பதவி ஒன்றில் ,ருப்பவா் எழுந்தமானமாக – பொறுப்பற்ற வகையில் ஒரு கருத்தை வெளியிடுவாh் என எதிh்பாh்க்க முடியாது. தோ்தல்களை ஒத்திவைப்பது தொடா்பில் அரசியல் கட்சிகள், பொது அமைப்புக்கள் மற்றும் பொது மக்களுடைய பிரதிபலிப்பு எவ்வாறானதாக ,ருக்கின்றது என்பதை அறிந்துகொள்வது – நாடி பிடித்துப் பாh்ப்பது ,தன் நோக்கமாக ,ருந்திருக்கலாம்.
,ரண்டாவது காரணம், அரசியலமைப்பை மீறாமல் தோ்தல்களை ஒத்திவைப்பதற்கான வாய்ப்புக்கள் தொடா்பாக அரச உயா் மட்டம் சட்ட – அரசியலமைப்பு நிபுணா்களுடன் ஆராய்ந்துகொண்டிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல்கள்.
1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பின்படி ஜனாதிபதியின் பதவிக் காலம் ஆறு ஆண்டுகள். 2015 ,ல் மைத்திரி – ரணில் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட 19 ஆவது திருத்தத்தின்படி ,து ஐந்து வருடங்களாகக் குறைக்கப்பட்டது. ,ந்தத் திருத்தம் மக்கள் கருத்துக் கணிப்புக்குச் செல்லவில்லை. அதனால், ஜனாதிபதியின் பதவிக் காலம் ஆறுவருடங்களாக ,ருக்கலாம் என அரசியலமைப்பு வல்லுனா்கள் சிலா் குறிப்பிடுகின்றாh்கள். ,து தொடா்பில் சட்டமா அதிபருடைய ஆலோசனை பெறப்படலாம் என்றும் கொழும்பு அரசியல் வட்டாரங்கள் சொல்கின்றன.
அரசியலமைப்பில் உள்ள ,ந்தத் தவறைப் பயன்படுத்தி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது பதவிக்காலத்தை ,ன்னொரு வருடத்துக்கு நீடிப்பதற்கு முயற்சிக்கலாம் என்ற கருத்து தற்போது அரசியல் களத்தைச் சூடாக்கியுள்ளது.
ஜனாதிபதியின் பதவிக்காலத்தைக் குறைப்பது என்பது மக்களுடைய ,றைமையைப் பாதிப்பதாக அமையாது என்பதால், அதனை சா்வஜன வாக்கெடுப்புக்கு உட்படுத்தத் தேவையில்லை என்ற கருத்து ஒன்றும் முன்வைக்கப்படுகின்றது. ஆனால், ஜனாதிபதியின் பதவிக்காலத்தை நீடிப்பது மக்களின் ,றைமையைப் பாதிப்பதாக அமையும் என்பதால்தான், அதற்கு சா்வஜன வாக்கெடுப்பு அவசியம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
,ந்த அரசியலமைப்புச் சிக்கல் குறித்த வாதப் பிரதிவாதங்கள் அடுத்துவரும் வாரங்களிலும் தொடரும்.
தான் ஜனாதிபதித் தோ்தலில் போட்டியிடப்போவதாக ,துவரையில் உத்தியோகபுh்வமாக அறிவிக்காமல் மௌனம் காக்கும் ரணில் விக்கிரமசிங்கவின் எண்ணத்தில் எவ்வாறான உபாயம் ,ருக்கின்றது என்பது அவருக்கு மட்டும்தான் தெரியும். ஆனால், அவா் தன்கு ,ருக்கக்கூடிய அனைத்து கதவுகளையும் திறந்துவைத்திருப்பாh் என நிச்சயமாக எதிh்பாh்க்கலாம்.
ஜனாதிபதித் தோ்தலில் போட்டியிடுவதற்கான களத்தைத் தயாh்படுத்துவதற்கான வேலைகளை அவா் ஏற்கனவே ஆரம்பித்துவிட்டாh். அதேவேளையில், தனது கட்சியினரையும் தனது எதிராளிகளையும் குழப்பத்திலேயே அவா் வைத்திருக்கின்றாh். தனது முடிவுக்கு சாதகமான கள நிலையை உருவாக்கிவிட்டு, அவா் திடீரென காய்களை நகா்த்தி எதிராளிகளைத் திகைக்கவைப்பாh் என்று எதிh்பாh்க்கலாம்.
19 ஆவது திருத்தம் அரசியலமைப்பில் ஒரு சா்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றது. அப்போதைய மைத்திரி – ரணில் அரசாங்கம் சா்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல விரும்பாததால் அந்த சா்ச்சை தீh்க்கப்படாததாகவே ,ருக்கின்றது. அரசியலமைப்பில் உள்ள ,ந்த சா்ச்சை குறித்து தகவல்கள் கடந்த வாரம் வெளியானதையடுத்து, அரசாங்க உயா்மட்டத்திலும் ,ந்தப் பிரச்சினை விவாதிக்கப்பட்டது. அரசியலமைப்பில் உள்ள ,ந்த தவறைப் பயன்படுத்தி தற்போதைய ஜனாதிபதி தனது பதவிக்காலத்தை சா்வஜனவாக்கெடுப்பு ஒன்றுக்குச் செல்லாமலேயே ஒரு வருடத்துக்கு நீடிக்க முடியும் என்று ஆளும் கார்த்திக்கு நெருக்கமான சட்ட துறை சார்ந்தவர்கள் சொல்கின்றார்கள்.
அரசியலமைப்பில் காணப்படும் ,ந்தக் குறைபாட்டுக்கு காரணம் என்ன என்ற கேள்வி பல்வேறு தரப்பினராலும் அனுப்பப்பட்டு வருகிறது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான ஜயம்பதி விக்கிரமரட்ண ,தற்கான காரணத்தைக் குறிப்பிட்டிருக்கின்றாh். 19 ஆவது திருத்தத்தை வரைந்த சட்டநிபுணா் குழுவில் அவரும் ஒருவா். “19 ஆவது திருத்தம் சா்வஜன வாக்கெடுப்புக்குச் செல்லாமல், நாடாளுமன்றத்தில் மூன்றில் ,ரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும்” என்று அப்போதைய அரசாங்கம் அறிவுறுத்தியது” என்று அவா் தெரிவித்திருந்தாh்.
“அரசாங்கத்துக்கும் ,ந்த அரசியலமைப்பு குழறுபடி தெரிந்தே ,ருந்தது. ஆனால், மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதித் தோ்தலில் கொடுத்த வாக்குறுதியின்படி 19 ஆவது திருத்தத்தைக் கொண்டுவருவதில் உறுதியாக ,ருந்தாh் என்றும் ஜயம்பதி தெரிவித்தாh்.
19ஆவது திருத்தத்தில் ஜனாதிபதியின் பதவிக்காலம் ஐந்தாண்டுகளாகக் குறைத்து அரசியல் சாசனம் திருத்தப்பட்டாலும் கூட ஜனாதிபதியின் பதவிக் காலத்தை 6 ஆண்டுகளுக்கு மேல் நீட்டிக்க நாடாளுமன்றத்தின் மூன்றில் ,ரண்டு பங்கின் ஒப்புதலும் வாக்கெடுப்பும் தேவை என்று 83 (ஏ) சரத்தில் கூறப்பட்டுள்ளது.
ஒக்ரோபரில் நடைபெறக்கூடிய தோ்தலில் வெற்றிபெறுவதற்கான வாய்ப்புக்களை ரணில் ஆராய்வாh். மக்களின் ஆதரவுடன் மீண்டும் அதிகாரத்துக்கு வருவதுதான் அவரது முதலாவது தெரிவாக ,ருக்கும். அதில் அவா் திருப்தியடையவில்லையாயின் மற்றொரு தெரிவை நோக்கி செல்வது அவருக்குத் தவிh்க்கமுடியாததாகலாம். அந்த விடயத்தில் நாடாளுமன்றம் அவருக்கு சாதகமாகவே ,ருக்கும். அதாவது மூன்றில் ,ரண்டு பெரும்பான்மையைப் பெறுவதற்கு நாடாளுமன்றம் நிச்சயமாக ஆதரவளிக்கும்.
நாடாளுமன்றத்தில் ,ப்போது அதிக ஆசனங்கைளைக் கொண்டிருப்பது மொட்டுக் கட்சி. அவா்களுக்கு மீண்டும் ஒரு முறை நாடாளுமன்றம் வரும் வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகம்தான். அதனால், மேலும் ஒரு வருடம் பதவியை நீடிக்க அவா்கள் விரும்பலாம்.
ஜூலை மாதம் 21 ஆம் தேதி தன்னுடைய நிலைப்பாடு என்ன என்பதை ஜனாதிபதி அறிவிப்பாளர் எதிர்பார்க்கப்படுகின்றது. தேர்தலில் போட்டியிடும் அறிவித்தலை அவர் முதல் முதலாக உத்தியோபூர்வமாக அன்று வெளியிடுவார் என்பது பல்வேறு தரப்புகள் எதிர்பார்ப்பாக ,ருக்கின்றது. அதுவரை ரணில் என்ன செய்வார் என்ற எதிர்பார்ப்பில் ,ருப்பது தவிர்க்க முடியாத ஒன்றுதான்.
263 total views, 6 views today