பறவையும், நானும் ஒன்றாகவே பறந்தோம், மகிழ்ந்தோம்.
- மாதவி.யேர்மனி
10.05.2024. Algarve. Portugal.. பறவை பறக்கும் வரை காத்திருந்து சுடுவது ஒரு (படம் எடுப்பது) அற்புதமான அனுபவம்.
போத்துக்கல் அல்காறா வ் (Algarve) கடற்கரையில் 09.05.2024 மாலை 4.மணிக்கு ஒரு பறவை என்முன் இருந்த தூணில் வந்து அமர்ந்தது. பொதுவாக மூன்று நான்கு நிமிடங்களில் பின் மீண்டும் பறந்துவிடும்.
நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் நோர்வே நாட்டில் வசிக்கும் கீதா இரவி அவர்கள் எடுத்த புகைப்படங்கள் பலவற்றை வெற்றிமணி பத்திரிகையில் பிரசுரித்து உள்ளேன்.
அப்போ அவர் தனது அனுபவங்களையும் பகிர்ந்து இருந்தார். இப்போது எனக்கு ஒரு சந்தர்ப்பம். அந்த அனுபவங்களை நானும் சுயமாக அனுபவிக்க.
என்முன் அமர்ந்த பறவை பறக்கவே இல்லை. நாம் நண்பர்கள் ஆகிவிட்டோமோ!
இல்லை நானும் பறவையாகிவிட்டேனோ!
அதனாலோ என்னவோ பறவையும், பயமில்லாமல் ஓய்வெடுத்தது.
எனக்கு கைதொலை பேசியை தூக்கிப்பிடிக்க,பிடிக்க சற்று பிரசவலி ஆரம்பித்தது.
எனக்கு மீண்டும் கீதா இரவி யின் நினைவு வந்தது,அவள் கேமராவும் (
Camera : Canon EOS 7D Mii Lens : Sigma 60mm-600mm 3kg 400 g
) நீண்ட ஜும் லென்ஸ் இவற்றை எப்படிச் சுமந்து இருப்பாள்.
எழுந்து நடமாடும் இயல்பும் அற்றவள். இருந்தும் அவள் புகைப்படக்கலை மீது கொண்ட வெறியை உணர்த்தவே
அவள் தனிப்பட உடல் நிலையை குறிப்பிட்டேன்.
சில அனுபவங்கள் சுயபரீட்சைக்கு உட்படும்போதுதான் அதன் ஆழம் புரியும்.
பறவை என்னுடன் நேசம் கொண்டாடியது. பறவையை பறக்கவைக்க
உஷ்! உஷ்! என்றேன்.
அது தன்னுடன் கதைப்பதாக எண்ணியேதே அன்றி, பயம் கொண்டு பறக்கவில்லை.
அந்த நேரம் என்னை நோக்கி ஒரு நேடிய மனிதன் நடந்து வர, பறவை பறந்தது. பறவைக்கு அவன் அந்நியன், அப்படி என்றால் நான்.
நான் சுட்டேன். சிறகு விரிக்கும் நேரம். மகிழ்ச்சி யில் பறவை மட்டுமல்ல நானும் சேர்ந்து கூடவே பறந்தேன்.
படங்கள் வெற்றிமணி. உண்மையாக நான் சுட்டது.
403 total views, 9 views today