தாய்மண்ணில் வெற்றிமணி நிலாமுற்றம்.
வெற்றிமணி பத்திரிகை யின் 30வது ஆண்டு நிறைவு விழா!
06.07.2024 சனிக்கிழமை பருத்தித்துறை நகரில் சிறப்பாக நடைபெற்றது.
தேவாரத்துடன் விழா ஆரம்பமானது. மங்கல விளக்கினை , யேர்மனி ETR வானோலி அதிபர், அகரம் சஞ்சிகை ஆசிரியர் த. இரவீந்திரன் அவர்களின் அன்னை சின்னத்தங்கம் தர்மலிங்கம் ஏற்றிவைத்தார்.
தொடர்ந்து முனைவர் மனோன்மணி சண்முகதாஸ், வெற்றிமணி லிமிடெட் யு. கே. மகாமையாளர்ஜெயபவானி சிவகுமாரன்.
விழா அமைப்பாளர். திருமதி. யோ. சாந்தி.
ராஜாராணி சேவை இல்ல அதிபர் திருமதி. புலோரன்ஸ் ராணி. இருதயராஜா.
திருமதி. Dr. சகிதேவி. தயாபரன்
சமூக சேவையாளர். குரும்பசிட்டி பொ. தங்கராசா.
திருமதி லிங்கா. ஜெயபாலன்முன்னாள் வெற்றிமணி சுவிஸ் பொறுப்பாளர்.கவிஞர். த. ஐங்கரன்,வெற்றிமணி (தாயகம்) முன்னாள் ஆசிரியர் வலன்ரீனா இளங்கோவன். ஆகியோர் ஏற்றிவைத்தனர்.
வரவேற்பு உரையை வெற்றிமணி பத்திரிகை ஆசிரியர் நிகழ்த்தினர். தன் உரையில் ஆரம்பகாலத்தில் வெற்றிமணி பத்திரிகை உருவாக்கம் இன்று போல் அல்ல, மிகவும் கடினமான ஒரு காலகட்டம், அன்று முதல் இன்றுவரை வெற்றிமணியின் வளர்ச்சிக்கு உதவும், வியாபார நிறுவனங்கள், படைப்பாளிகள், வாசகர்கள் என அவர்களது பணிகளையும் நன்றியுடன் சொல்லி இன்று இந்த விழாவிற்கு வருகை தந்தவர்களையும் குறிப்பிட்டு, வரவேற்பு உரையை நிறைவு செய்தார்.
மூத்த ஊடகவியலாளர், பாரதி இராசநாயகம் தலைமையில் விழா இடம்பெற்றது. அவர் தனது தலைமை உரையில் 30 வருடங்கள் தொடர்ந்து ஒரு பத்திரிகை செய்வது மாபெரும் சாதனை.வெற்றிமணி ஆசிரியரின் முயற்சிகளுக்கு எம்மவா்கள்மத்தியில் கிடைத்துள்ள ஒரு அங்கீகாரம். இது எனவும் குறிப்பிட்டார்.
பிரதம விருந்தினராக பேராசிரியர் அ. சண்முகதாஸ், முனைவர் மனோன்மணி சண்முகதாஸ்கலந்து சிறப்பிக்க, சிறப்பு விருந்தினராக, உளவள ஆலோசகர் கோகிலா மகேந்திரன், பொறியியலாளர், சி. தயாபரன்.டாக்டர் சகி. தயாபரன், தாயக வெற்றிமணி முன்னாள் ஆசிரியர் வலன்ரீனா இளங்கோவன்,ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.வாழ்த்துகள் குரும்பசிட்டி த. ஐங்கரன், கவிஞர் வ. வடிவழகையன் ஆகியோர்கவிமூலம் வாழ்த்துகள் தெரிவித்தனர்.மேலும்வெற்றிமணி யின் 28 வது வெளியீடு வைகல் நூல் அறிமுகம் இடம் பெற்றது.கரிணி கண்ணன் எழுதிய நூலின் நூல் நய உரை முனைவர் மனோன்மணி சண்முகதாஸ் நிகழ்த்தினார்.வைகல் என்ற நூலின் பெயர் பழமையான சொல். இவற்றை இன்று அறியவைக்கிறது. இந்நூலின் பெயர்.நூலின் உள்ள சில கட்டுரைகளை உதாரணம் காட்டி நூலின் தன்மையை உரைத்தார்.அதனைத் தொடர்ந்து உள வள நல ஆலோசகர் கோகிலா மகேந்திரன் அவர்கள் உரையாற்றினார். தனதுரையில் வெற்றிமணியில் அமரர் பொ. கனகசபாபதி அவர்கள் எழுதுகிறார் என்றறிந்த பின்னர் தனக்கும் வெற்றிமணி மீது அபிமானம் அதிகமானது என்றார். திறவுகோல், (இது ஒரு விண்ணானம்) மாறன் மணிக்கதைகள் இரண்டும் வெற்றிமணி வெளியீடாக வந்ததைக் குறிப்பிட்டார்.பிரதம விருந்தினராக கலந்து உரையாற்றிய பேராசிரியர் அ. சண்முகதாஸ் யேர்மனியில் வெற்றிமணி எடுத்த விழாக்களையும், அவற்றில் பலவற்றில் தான் கலந்துகொண்டதும், மனோன்மணி சண்முகதாஸ் அவர்களின் பிஞ்சு மனங்களின் தேடல் நூலை வெற்றிமணி தனது வெளியீடாக வெளியிட்டதுடன், யேர்மனியில் வெளியீட்டு விழாவையும் செய்ததை நினைவு கூர்ந்து உரையாற்றினார்.சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றிய பொறியியலாளர் சி. தயாபரன் அவர்கள் வெற்றிமணி ஸ்தாபகர் குரும்பசிட்டி பொன் பரமானந்தர் பாடசாலையை தரம் உயர்த்தியும், அவரது காலத்தில் 800.மாணவர்கள் கல்விகற்றதையும், இன்று உள்ளவர்கள் அறியவேண்டும், அத்தோடு வசதிகள் சேவைகள் கட்டணத்தில் ஆசிரியர்களாக பணியாற்றியவர்கள் நிரந்தமாக்கப்படவேண்டும் என முதல் அவர்களுக்கான ஒரு சங்கம் அமைத்து போரடியவர் மு. க. சுப்பிரமணியம் அவர்கள் என்றார். இன்று சிவகுமாரன் வெற்றிமணி பத்திரிகையை 30 வருடங்களாக வெற்றியுடன் நடத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.சிறப்பு விருந்தினர் வலன்ரீனா இளங்கோவன் அவர்கள் 2005 ம் ஆண்டு தாயகத்தில் வெற்றி மணி நடத்திய அனுபவத்தையும், யாழ்பாண நாட்டிய மரபுகள் என்ற தனது நூலை யேர்மனியில் வெற்றிமணி வெளியீடாக வெளியிட்டதையும், வெற்றிமணி விழாவில் கலந்து சிறப்பிக்க தன்னை அழைத்ததையும் , நினைவுகூர்ந்தார்.வெற்றி மணி தயாரிப்பில் வெளிவந்த எழுதாத கவிதைக்கு முதல் பரிசு, குறும்படம், தம்பட்டம் இரண்டும் திரையிடப்பட்டது.
பார்வையாளர்களது பாராட்டைப்பெற்றது.எழுதாத கவிதைக்கு முதல் பரிசு குறும்படத்தில் இடம் பெற்ற ஊரிக்காட்டுக்குள்ள பாடலும், தம்பட்டம் குறும்படத்தில் நோர்வே கவிதா லட்சுமி அவர்களுடன் நெறியாட்கையில் யேர்மனியில் தெருவிழா விழாவில் இடம் பெற்ற குடமாடும் நடனம் மற்றும், நடிகர்களது இயல்பான நடிப்பும் பேசப்பட்டது.
நன்றியுரையை விழா அமைப்பாளர் யோ சாந்தியவர்கள் நிகழ்த்தினார்.மாலை 3.20 க்கு ஆரம்பமான விழா மாலை 6.30 நிறைவடைந்தது.ராஜாராணி சேவை இல்லம் மண்டப ஒழுங்குகளை சிறப்பா செய்து இருந்தார்கள்.
394 total views, 6 views today