ஒவ்வொரு வருடமும் எப்படா வரும் என்று காத்திருக்கும் அளவுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது தமிழர்; தெருவிழா.
- பொன்.புத்திசிகாமணி.யேர்மனி.
மேற்படி நிகழ்வு 06,07,08, புரட்டாதி 2024 மூன்று தினங்கள் கோலாகலமாக நடைபெற்றது. டோட்முன்ட் நகர மத்தியில் அமைந்த விஸ்த்தீரணமான இடத்தில் ஏராளமான பார்வையாளர்களை வரவேற்று இத் தெருவிழா சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மத்தியில் அமைக்கப்பட்டிருக்கும் அரங்கம் ஆடல்,பாடல் என்று தொடராக நிகழ்ச்சிகளை வழங்கிக் கொண்டிருக்க,எந்த நேரமும் மக்கள் பெருகி வந்து பார்த்து மகிழ்ந்து கொண்டே இருந்தார்கள். குடும்பமாக நானும் கலந்து கொண்டேன்.கலந்து கொண்ட மக்களில் கலகலப்பைக் காணக் கூடியதாக இருந்தது.நீண்ட நாள் சந்திக்காமல் இருந்தவர்கள் சந்திக்கின்ற களமாகவும் இந்நிகழ்ச்சி சிறப்பைப் பெறுகின்றது.
பறை,காவடி,கிராமிய நடனங்கள், பொய்க்கால் குதிரை,போன்ற கலாச்சார நிகழ்வுகள் இந்த விழாவின் நோக்கத்தைப் பறைசாற்றின.இந்த நிகழ்ச்சியைத் திறம்பட முன்னெடுத்துச் செல்லும் விழாக்குழுவுக்கு பாராட்டைத் தெரிவிக்கலாம். இவ்வருடம் ஆறாவது வருடம் என்று நினைக்கிறேன். இம்முறை அதிக அளவில் கடைகள் நிறைந்திருந்தன. பாரம்பரிய உணவுகளான,ஒடியல் கூழ்,மூலிகைப்பிட்டு,அப்பம்,தோசை என்று அசத்தியிருந்தார்கள்.இவற்றையெல்லாம் யேர்மனியர் விரும்பி உண்டதைப் பார்க்கக் கூடியதாக இருந்தது.நம்ம நாட்டு பனங்கள்ளுக்கூட அங்கிருந்து போத்தலில் அடைத்து வரவழைத் திருந்தார்கள்.அது பெரு மளவு விற்பனையாகியது. மரக்கறிகள், உடுப்புக் கடைகள், தாவரங்கள் பழவகை கள் என்று நிறைத்து வைத்திருந்தார்கள்.
மகிழ்ச்சியான பொழுது.ஒவ்வொரு வருடமும் எப்படா வரும் என்று காத்திருக்கும் அளவுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத் தியிருக்கிறது,தெருவிழா. யேர்மனியில் சுhநinளைஉhந ளவசயßந வில் நிரந்தரமாக அமைய இருக்கும் வள்ளுவர் சிலையின் மாதிரி வடிவமும்; இந்நிகழ்ச்சியில் பார்வைக்கு வைத்திருந்தார்கள். “ஆவணகம்”திரு அன்ரன் அதிக தூரத்தில் இருந்து குடும்பமாக வந்து கலந்து கொள்வார். பண்டையகால பொருட்களுடன், ஏடுகள்,விதவிதமான பணங்கள்,முத்திரைகள் என்று காட்சிப் படுத்தியிருந்தார். இவரின் செயல் பாராட்டப் படவேண்டியதே.
சங்கங்கள்,கழகங்கள் என்று புத்தகங்ளைப் பார்வைக்கு வைத்திருந்தார்கள். நல்ல நிகழ்ச்சியொன்றைப் பார்த்த திருப்தியுடன் திரும்பியிருந்தோம்.”வெற்றிமணி”அங்கும் ஒலித்துக் கொண்டிருந்தது. விழாக்குழுவுக்கு பாராட்டுகள்.
21 total views, 6 views today