திருமணத்துக்குப் பின் கணவனோ, மனைவியோ அவரவர் குணவியல்பிலிருந்து விலகிப் பரஸ்பரம் மற்றவரின் பண்பைப் பழகும் வாழ்வியல் அது.
-கானா பிரபா (அவுஸ்திரேலியா)
ஸ்ரீPதிவ்யா எனக்கு ரொம்பப் பிடிக்கும், அதனால மெய்யழகன் படைப்பில் அவங்களையும் சேர்க்கணும்னு ஹைதராபாத் வரை தேடிப் போய் பிடிச்சு வந்தேன். அவங்க முதல்ல நடிக்க இருந்தது கார்த்தியோட தங்கையாக” இப்படியாக சாய் வித் சித்ராவில் இயக்குநர் சி.பிரேம்குமார் தன் பேட்டியில் சொல்லி இருந்தார்.
உண்மையில் மெய்யழகன் படத்தில் அர்விந்த்சாமிக்கு அடுத்ததாகப் பாத்திர வார்ப்பில் என்னை மிகவும் கவர்ந்தவர் ஸ்ரீPதிவ்யா தான்.கார்த்தியும், அர்விந்தசாமியும் ராத்திரியில் குடித்துக் கும்மாளமிடப்போகிறார்கள் என்று தெரிந்தும், நயமாக அவர்களுக்கு வழி விடுவதும்
அவர்களின் கொட்டத்தைக் காது கொடுத்துக் கேட்டு முறுவலிப்பதும்,”சாப்பிடுறீங்களாண்ணா” அன்றே அறிமுகமான அந்நிய உறவுக்காறர் அர்விந்த்சாமியைப் பரிவோடு கேட்பதும்,இதையெலாம் தாண்டி அந்த ஜல்லிக்கட்டுக் காட்டியில் மிடுக்கோடு சினிமாத்தனமில்லாத ஒரு வீராங்கனையாக வருவதும் என்று ஸ்ரீPதிவ்யாவுக்கு ஒரு அழுத்தமான வாழ் நாட் பாத்திரத்தை பிரேம்குமார் கொடுத்திருக்கிறார்.
அதையெல்லாம் தாண்டி ஒரு அனுபவரீதியான ஒரு காட்சியும் இருக்கும். அர்விந்த்சாமிக்கு உதவ வேண்டும் என்று கார்த்தி எல்லாத்தையும் அள்ளிப் போடும் போது ஒத்தாசையாக ஸ்ரீPதிவ்யா நாண்டுகொண்டு நிற்பதை அக்மார்க் வெள்ளந்திக் கிராமியப் பெண்களிடம் பார்க்கலாம்.அதாவது தன் கணவன் அப்பாவியாக எல்லாத்தையும் வழிச்சுத் துடைச்சு உதவும் போது கூடவே அவனின் குணாம்சம் ஒட்டிக் கொண்ட பெண்களை அனுபவத்தைக் கண்டிருக்கிறேன்.
“இந்தாங்க ! இதையும் அவங்களுக்குக் கொடுத்துடுங்க பாவம்” என்ற மனோநிலை. இதை என் வீட்டம்மாவிடம் ஏதோவொரு சந்தர்ப்பங்களில் அடிக்கடி கண்டிருக்கிறேன். திருமணத்துக்குப் பின் கணவனோ, மனைவியோ அவரவர் குணவியல்பிலிருந்து விலகிப் பரஸ்பரம் மற்றவரின் பண்பைப் பழகும் வாழ்வியல் அது.
63 total views, 3 views today