சிற்பங்கள் கூடி அளவளாவும் கழுகுமலை..!

மதுரை ஆர்.கணேசன்

தமிழகத்தில் எண்ணிலடங்கா திருக்கோயில்கள் இருந்தாலும் கற்பனைகளில் பொங்கி வழியும் ஒரு சிற்பக்கோயில் என்று வர்ணிக்கப்படுகிற “..கழுகுமலை வெட்டுவான் கோவில்..” பற்றி சொல்லும் போதே வியப்பும் பீறிடுகிறது..!
“..தென்னகத்தின் எல்லோரா..” என்று அழைக்கப்படுகிற இக்குடவரைக்கோயில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டிக்கும் சங்கரன்கோவிலுக்கும் இடைப்பட்ட சாலையில் அமைந்திருக்கிறது.

“..இராமாயணக் காலத்தில் சம்பாதி என்ற கழுகு வடிவம் பெற்ற முனிவர் சாபவிமோசனத்திற்காக இங்குள்ள ஆம்பல் குளத்தில் நீராடி முருகப்பெரு மானை வழிபட்டு தன்னுடைய சாபவிமோசனம் நீங்கியதால் “..கழுகுமலை..” என்ற பெயர் பெற்றதாக தலபுராணம் கூறுகிறது. கழுகுப்பார்வையில் பார்த்தால் புரியும் சுமார் 300 அடி உயரம் கொண்ட
இம்மலை தன்னுடைய உடம்பிலிருந்து “..ப..”வடிவில் சதைப்பகுதியை பிய் த்து தானம் கொடுத்தது போல தெரிகிறது அங்கு 47 அடி நீளத்திலும் 40 அடி சதுர உயரத்திலும் மேலிருந்து கீழாக குடைந்து சிற்பக்கோயிலை உரு வாக்கியிருக்கிறார்கள். மலை ஏறும் போதே இடது பக்கம் கீழே ஆம்பல் ஊரணியும், பக்கத்திலேயே கோயிலும் அதனருகே ஒரு பாழடைந்த மண்டபம் பார்த்துக் கொண்டே கவனமாக சென்றால் “..வெட்டுவான் கோயிலை..” அடையலாம்.

அதேபோல வலது பக்கம் மலை உச்சியில் அய்யானார் கோயிலுக்கும் செல்லலாம் அங்கு ஸ்ரீசென்னம்மாள், ஸ்ரீவனப்பேச்சிம்மன், ஸ்ரீமுத்து வீரப்பன் சாமி, ஸ்ரீPகருப்பசாமி, ஸ்ரீமதுரைவீரனுக்கும் தனித்தனி சன்னதிகள் அமைக் கப்பட்டிருக்கிறது. இதையொட்டி சமணர் பள்ளி மற்றும் சமணர்கள் தங்கி இருந்த சிறிய குகையும் இருக்கிறது சமண தீர்த்தங்கரர்களான வர்த்தமானர் உள்பட இருபத்து நான்கு தீர்த்தங்கரர்கள் உள்பட சமணர்களின் தாய் தந்தை குரு சீடர்களுக்கும் எண்ணற்ற சிற்பங்கள் மற்றும் சிற்பங்களை வடித்துள்ளவர்களின் பெயர்கள் வெளிப்புறப் பாறையில் வட்ட எழுத்துக்களாக பொறிக்கப்பட் டுள்ளது.

8 ஆம் நூற்றாண்டில் பராந்தக நெடுஞ் சடையன் என்ற பாண்டிய மன்ன னால் கழுகுமலை வெட்டுவான் கோயில் தோற்றுவிக்கப்பட்டது என்றாலும் ஏனோ இக்கோயில் முழுமை பெறாமல் பாதியிலேயே கைவிடப்பட்டதாக சொல்லப்படுகிறது..? கருவறையில் மூலவராக சிவபெருமானை பிரதிஷ்டை செய்திருக்க வேண்டும் ? ஆனால் தற்போது விநாயகர் சிலை மட்டும் அமர்ந்த நிலையில் காணப்படுகிறார். இக்கோயில் வடகிழக்கு திசையை நோக்கி அமைக்கப்பட்டிருக்கிறது கருவறை, அர்த்த மண்டபம் இதற்கு மேலே இரண்டு நிலை கொண்ட விமான அமைப்பின் மேலே தாமரை போன்று இதழ்கள் விரிந்த பகுதியில் கலசம் மட்டும் இல்லை..?

தெற்கு பகுதியில் தட்சினாமூர்த்தி மிருதங்கம் வாசிப்பது போன்ற சிற்பம் முதன் முதலாக இங்குதான் வடிக்கப்பட்டுள்ளது..! மேலும் கிழக்கில் சிவன், மேற்கில் திருமால், வடக்கில் பிரம்மன், மற்றும் ஒருபக்க பாறையில் தனித்து குறவன், குறத்தி போன்ற தோற்றத்தில் சிற்பங்கள் பார்க்கும் போது ரசனைக்கும் சிந்தனைக்கும் சவால் விடுகின்றன..!
முருகப்பெருமான் அணிகலன்களுடன் கூடிய காட்சியில் தன்னுடைய இடது தொடை பக்கத்தில் கைவைத்துக் கொண்டவாறு நான்கு கரங்களுடன் காட்சி தருகிறார். இரண்டடுக்கு விமானங்களில் உள்ள நான்கு மூலைகளிலும் நந்தி சிற்பங்கள் இவற்றுக்கு கீழே யாளிவரிகள் கபோதகம் மற்றும் குரங்கு மற்றும் சிங்கம் தவிர ஓர் இடத்தில் பூதக்கணங்களின் குறும்புத்தனங்களையும் வரி சையாக பார்க்க முடிகிறது. கழுகுமலை வெட்டுவான் கோயில் சிற்பங்களை எட்டி, எனாதி,காவிதி போன்ற மெச்சிய பட்டங்கள் பெற்ற சிற்பிகளே வடித்துள்ளதாக தெரியவருகிறது..?!

உங்களது வாழ்வில் ஒரு முறையாவது “..கழுகுமலை வெட்டுவான் சிற்பக் கோயிலை பார்த்து ரசித்து வியப்படைந்து மனம் பூரித்தால்..” அதுவே இந் த சிற்பக்கோயிலை செதுக்கிய சிற்பிகளுக்கு செலுத்தும் பெரும் கௌரவமாகும்;..!!!
எப்படி செல்லலாம் ? மதுரையிலிருந்து கோவில்பட்டி 95 கி ஃ மீ கோவில்பட்டியிலிருந்து கழுகுமலை 22 கி ஃ மீ தூரத்தில் அமைந்துள்ளது.வெட்டுவான் கோயில் காலை 10.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை தரிசனம் செய்ய முடியும்.

21 total views, 9 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *