இரும்புக் கதவொன்றில்
உனது பிஞ்சுக் கை அசைந்து
கொண்டேயிருக்கிறது
சூனு

யாரும் நம்புவதில்லை
எனக்குள் நீ வளர்வதை வாழ்வதை

சோப்புக் கரைசலால் குமிழ் படைக்க
மூச்சுக் காற்றை ஊதுவது போல்
நீ கதவு திறப்பதை
அம்மா என அழைத்தபடி ஓடிவருவதை
பூக்களால் கன்னத்தில் ஒத்தடமிடுவதை
மணல்களை எனக்கான மாத்திரைகள் என்பதை
இரவை ஊஞ்லாக்குவதை
எனது கண்களை தசமபாகமாக சிதறவிடுவதை
நித்திரைகளைப் புன்னகையாக்குவதை
நிலத்தின் ஆழத்தை எடுத்து
நீ எனக்குப் பொட்டு வைப்பதை
உனது அப்பாவின் பெயரை ஆன்மாவின்
தண்டில் எழுதுவதை
மனதிற்குள்ளும் நஞ்சுக்கொடி வழியாகத்தான்
உனக்கு உயிர் தருகிறேன் என்பதை
யாரும் நம்புவதில்லை சூனு

ஓவியம்:கே.கே.ராஜா

–தேன்மொழி தாஸ்

932 total views, 2 views today

1 thought on “சூனு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *