வம்பு வார்தைகள் ஏனோ?

என் உதட்டில் உள்ளதைத் தரவோ’ என்ற வரிகள் ஆபாசம் என்று தடை விதித்தார்கள். பின்னர் வந்த பாடலில்
‘இதழே இதழே தேன் வேண்டும்
இடையே இடையே கனி வேண்டும்’ என்றதை இலக்கிய வர்ணனை என்று அனுமதித்தார்கள்.
அனேகமான ஆபாசப் பாடல்கள் எழுதியது வாலிதான். அவரின் உச்சக் கட்ட அருவருக்கத் தக்க பாடல்தான் ‘எப்படி எப்படி சமஞ்சது எப்படி’ என்ற பாடல். இந்தப் பாடலைக் கேட்டு விட்டு ‘இதை எல்லாம் உன் அம்மா தங்கைச்சிட்டை போய் கேக்குறதுதானே’ என்று வாலியை மேடையில் ஒரு பெண் ஏக வசனத்தில் திட்டிப் பேசியதை வாலியும் கண்டு கொள்ளவில்லை தணிக்கை குழுவும் கண்டு கொள்ளவில்லை.
‘உரலு ஒண்ணு அங்கிருக்க
உலக்கை ஒண்ணு இங்கிருக்க
நெல்லுக் குத்த நேரம் எப்போ
சொல்லேண்டி சித்திரமே
நெல்லுக் குத்தும் நேரத்திலை
உரலுக்குள் மாட்டிக்குவே’ என்ற வரிகளோடு வாலியின் பாடல் வந்ததன் பின்னர் ஆபாசம் வெகு
தூக்கலாக பாடல்களில் இடம் பெற ஆரம்பித்தன.
‘கதவ சாத்து கதவ சாத்து மாமா
நான் கன்னி களியணும் ஆமா’,
‘படிப்படியா அது தொடங்கட்டும்
பள்ளியறையில் சூடு அடங்கட்டும்,
‘கண்ணா என் சேலைக்குள்
கட்டெறும்பு புகுந்திருக்கு எதுக்கு’,
‘இங்கு சொல்லாத இடம் கூட குளிர்கின்றது
மனம் சூடான இடம் தேடி அலைகிறது’ என்றெல்லாம் கவிஞர்கள் ஆளாளுக்கு எழுதித் தள்ளினார்கள்.
பாடல்களில் ஆபாசங்கள் நிறைந்ததால் இனி ஆபாசப் பாடல்களைப் பாடுவதில்லை என கே.ஜே.யேசுதாசும், எஸ்.பி. பாலசுப்ரமணியமும் பகிரங்கமாக அறிவித்தார்கள்.
ரகு என்றொரு சென்னையைச் சேர்ந்த நலன் விரும்பி ஆபாசப் பாடல்கள் எழுதிய வாலி, வைரமுத்து, பா.விஜய் போன்றோர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 2005 இல் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார்.
நன்றி: மனஓசை
— ஆழ்வார்பிள்ளை
1 thought on “வம்பு வார்தைகள் ஏனோ?”