குறும்கவிதை

தனிமைக்கு மட்டுமே சொல்லி அழுங்கள்
மனிதர்களை போல் அது – அதை
யாருக்கும் சொல்லி சிரிக்காது.
பேசுபவற்றை தவறாக புரிந்து கொள்பவரிடம்
மௌனமாய் இருங்கள்.
தவறாக பேசுவதற்காகவே வாயைத்
திறப்பவர்களிடம் விலகியே இருங்கள்.
பிடித்தவர் என்பதற்காக
பிழைகளை சுட்டிக்காட்ட தவறாதீர்கள்
பிடிக்காதவர் என்பதற்காக
நல்லவற்றை தவறாக பரப்பாதீர்கள்
கோபப்படுவது உண்மையான அன்பு
அதற்காக பிரிவது என்றால் – அது
விலகுவதற்கான முன் எற்பாடு..!
விலகியிருக்க விரும்புபவரிடம்
அன்பை திணிக்காதீர்கள் – தற்சமயம் அதை
அவர் வேறொருவரிடம் எதிர்பார்க்கிறார்.
எதிர் பார்ப்புகள் ஒரு போதும்
ஏமாற்றம் தராது – எவரிடம் எதிர் பார்க்க
வேண்டும் என்பதில் தான் ஏமாந்து விடுகின்றோம்.
அன்பு நிரந்தரமானதாக இருக்க வேண்டும்
இல்லை என்றால் அடிக்கடி பிரிவு ஏற்ப்படும்.
பிரிவு என்றாலும் நிரந்தரமானதாக இருக்க வேண்டும்
சேர்ந்த பிறகும் விலகிப்போவது பழகிவிடும்.
சந்தோசம் என்பது
மற்றவர்கள் முன் சிரிப்பது அல்ல..!
தனிமையில் அழாமல் இருப்பது.
– நெடுந்தீவு முகிலன்
2 thoughts on “குறும்கவிதை”