திரு பா.நந்தகுமார் அவர்களுக்கு ‘அமிர்தானந்த சுரபி” விருது வழங்கிக் கௌரவம்.

யேர்மனி நந்தீஸ் உணவக உரிமையாளர் திரு.பாலகிருஸ்ணன் நந்தகுமார் அவர்களுக்கு விருதும், பாரட்டு நிகழ்வினையும் நந்தீஸ் உணவக குழுமத்தினர் ஒன்றிணைந்து நடத்தினர்.
மேற்படி நிகழ்வு கடந்த 27.12.2018 கிறிபில் நகரில் திரு.திருமதி நந்தகுமார் அவர்களின் மகள்; பிறின்சிகா அவர்களின் முதலாவது பிறந்த நாள் வைபவத்தில் ஒரு பகுதியாக இடம்பெற்றது.
இந்த கௌரவிப்பு நிகழ்வினை சிறப்புற கி.த.கவிமாமணி; தொகுத்து வழங்க வாழ்துரையை சுவற்றா கனகதுர்க்கா அம்பாள் ஆலய குரு சிவ.ஜெயந்தி நாதக் குருக்கள் நிகழ்தினார்.
அதனைத் தொடர்ந்து நிகழ்வின் பிரதமவிருந்தினராக கலந்து சிறப்பித்த வெற்றிமணி சிவத்தமிழ் பிரதம ஆசிரியர் கலாநிதி மு.க.சு.சிவகுமாரன் அவர்கள் திரு நந்தகுமார் அவர்களின் தனித்துவத் தன்மையையும் அவர் தன்னைத்தானே தேடிக்கொண்டு தன் ஆற்றலை சிறப்பாக வெளிபடுத்திய தன்மையையும் எடுத்துரைத்தார். அதனைத் தொடர்ந்து நந்தீஸ் உணவக குழுமத்தினர் சார்பாக கலாநிதி சிவகுமாரன் தம்பதிகள் திரு பாலகிருஷ்ணன் நந்தகுமார் அவர்களுக்கு ‘அமிர்தானந்த சுரபி” என்னும் விருதினை வழங்கி கௌரவித்தனர்.
அதனைத் தொடர்ந்து கலைஞானமணி தி.லம்போதரன்; அன்பர் நந்தகுமார் அவர்களுக்கு வாழ்த்து மடல்; வடிவம் தயாரித்து அதனுள் “அமிர்தானந்த சுரபி” என்ற சிறப்பு விருதினையும் இணைத்து வழங்கியிருந்தார். அவ்வாழ்த்தினை எசன் அறநெறிப்பாடசாலை அதிபர் திரு நயினை விஜயன் அவர்கள் வாசித்து வழங்கி, வாழ்த்தினார். தொடர்ந்து உலகக்கோவில் இணையத்தள அதிபர் திருசி.இராஜகருணா, அறிவிப்பாளர் சகநாயகன் திரு.சி.சக்திவேல் ஆகியோர் வாழ்த்துரை நிகழ்தினார்கள். நன்றி தெரிவித்து திரு.இன்பராஜ் அவர்கள் உரையாற்றினார்.
பி.குறிப்பு:
பிறந்த நாள் விழாவில் நம் மண்ணின் வாசம் மாறாது, சுண்டல் தள்ளுவண்டிலில் சுண்டல் பரிமாறியதும் (சுண்டல் வண்டியைத் தயாரித்தவர்
துஷி டெக்கோ உரிமையாளர் தி.துஷி) ஒற்றைத் திருக்கை வண்டியில்; பிறந்தநாள் குழந்தையை அழைத்துவந்ததும், நந்தீஸ் குழுமத்தின் தாய்மண் பற்றை பறைசாற்றியது. வண்டில் மேடை அலங்காரம் தாயகத்தை நினைவூட்டலாக அமைந்தது. இதனை துஷ்யந்தன் சபிலா தம்பதிகள் அசத்தலாக அமைத்திருந்தனர்.
அத்துடன் அமிர்தானந்த சுரபி பாலகிருஷ்ணன் நந்தகுமார் அவர்கள் தாயத்திலும் தான் வாழும் நாட்டிலும் பல தொண்டுகளை அமைதியாக தன் முகம்காட்டாது, தன்பணி செய்துகிடப்பதே என செய்து வாழ்பவர். பொதுவாக முன்நிற்காமல் பின்நின்று பல நற்காரியங்களை நடத்தும் சிறந்த குணம் படைத்தவர்.
இவ்விழாவினை முன்னெடுத்த நந்தீஸ் குழுமத்திற்கும் திரு.கமல்ராஜ் திரு.குணரத்தினம்.செல்வகுமாரன், அவர்களுக்கும் வெற்றிமணியின் வாழ்த் துக்கள். ஒரு தொழில் அதிபரை அவர்களுடன் பணியாற்றும் பண்பாளர்களின் பாராட்டும் குணம் போற்றப்படவேண்டியதாகும்.
1 thought on “திரு பா.நந்தகுமார் அவர்களுக்கு ‘அமிர்தானந்த சுரபி” விருது வழங்கிக் கௌரவம்.”