சாக்கடையும் மனிதர்களும்
சாக்கடை எனும் போது அதன் தோற்றமும் பெருபான்மையான மனிதர்களால் வெறுக்கத்தக்கதாகவும்,அருவருப்பானதாகவுமே பார்க்கப் படுகின்றது.
ஆனால் இந்த சாக்கடைகளை உற்பத்தி செய்பவர்களே மனிதர்கள்தான். சாக்கடைகளை இயற்கை ஒரு போதுமே உற்பத்தி செய்வில்லை.
இயற்கை மனிதர்களுக்கு தேவையான கடல்களையும் ஆறுகளையும் குளங்களையும் நீர்வீழ்ச்சிகளையும் கொடுத்து அவர்களைமகிழ்ச்சியாக வாழ உறுதுணையாக நின்றது.
ஆனால் மனிதர்கள்தான் இயற்கையை மதிக்காமல் இயற்கைக்கு துரோகம் செய்தார்கள்.
நவீனம் என்ற பெயரில் இரசாயன உற்பத்திகளை உற்பத்தி செய்து அதன் கழிவுகளை கடலில் கொட்டி கடலை அசுத்தமாக்கினார்கள்.கடலுக்குள் வாழும் உயிரினங்களை சாகடித்தார்கள்.
குடிக்கும் நன்னீராக இருந்த ஆறுகளுக்குள் அதன் சுத்தத்தையே அசுத்தமாக்கி நாசமாக்கினார்கள்.
ஆற்றினில் வாழ்ந்த உயிரினங்கள் அழிக்கப்பட்டன.ஆறு மண்ணை அரித்துவிடாமலிருக்க கரையோரங்களில் படர்ந்து காணப்பட்ட புல்பூண்டுகள் யாவும் கருகி அழிந்தன.
மிதமான விஞ்ஞான வளர்ச்சி மனித குலத்தையே ஒரு நாள் பூண்டோடு அழித்துவிடும் என்பதை மனிதகுலம் உணராமலிருக்கின்றது.
சாக்கடை என்று சொல்லி அருவருக்கும் மனதர்கள் தாங்கள் ஒவ்வொருவரும் சாக்கடையைச் சுமந்து நிற்கும் மனிதர்கள் என்பதை மறந்துவிடுகிறார்கள்.
உண்பதற்கும், சுவாசிப்பதற்கும், பார்ப்பதற்கும், கேட்பதற்கும், கழிவினை அகற்றுவதற்கும் இருக்கும் உறுப்புக்களை சுத்தப்படுத்தாமல் ஒருநாள்கூட விட்டால் அவை துர்நாற்றம் வீசும் உறுப்புக்களாக மாறிவிடும் என்பதை மனிதன் ஏனோ மறந்து விடுகிறான்.
துர்நாற்றம் வீசும் மனிதர்களுடன் அருகிருக்கவே சக மனிதன் அருவருப் படைவான். உணவு செரிமானம் அடைந்து உடலுக்கு தேவையான சத்துக்கள் உறிஞ்சப்பட்டு மிகுதி சக்கையான மலம், வெளியேறும் காலம் வரை அதே துர்நாற்றத்துடன் உடலுக்குள்ளேயே தங்கி நிற்பதை மனிதன் நினைத்துப் பார்க்கின்றானா.
குடிக்கும் நீர் சிறுநீரகத்தால் வடித்தெடுக்கப்பட்டு உடலுக்குத் தேவையானது போக மிகுதி வெளியேறும் காலம் வரை அதே துர்நாற்றத்துடன் மூத்திரப் பைக்குள் சேமித்து வைப்பதை அறி மனிதா.
வாசனைச் சவர்க்காரத்தை உடலெல்லாம் தேய்த்துப் பூசி குளித்து வாசனைத் திரவியங்களால் உடலைமணமாக்கி, வியர்வைத் துர்நாற்றத்தை வெளிவராமல் தடுத்து, அழகழகான உடைகள் உடுத்தும் மனிதன், அழகிய உடையாலும் வாசனைச் சவர்க்கார குளியலாலும், வாசனைத் திரவியப் பூச்சாலும் மூடிமறைக்கும் மனிதனுக்குள்ளேதான் துர்நாற்றம் வீசும் மூத்திரமும் மலமும் உண்டென அறி மனிதா.
உன் உடலிலிருந்து வெளியேற்றப்படும் மூத்திரமும் மலமும் கழிவுக் கால்வாயில் கலந்து சாக்கடையாகி வாய்க்கால் வழி ஓடி கடலில் கலக்கின்றன.
புலம்பெயர் தேசங்களில் எம்மவர்கள் பொதுமண்டபங்களில் கழிவிடங்களைப் பயன்படுத்துவதில் இரு வேறுபாடுகளைக் கடைப்பிடிக்கிறார்கள்.
தமிழர்களால் நடத்தப்படும் நிகழ்வுகளில்,கழிவிடங்களைப் பயன்படுத்துவதில் தமிழர்கள் கழிவிடங்களை அருவருபு;படன் பார்க்கிறார்கள்.
சுத்தத்தைப் பேணுவதில் அலட்சியமாக நடந்து கொள்கிறார்கள்.ஏனோ தானோ என நடக்கிறார்கள். கைதுடைக்கும் தாள்களை குப்பைக்கூடைக்குள் போடுவதில்லை. குப்பைக்கூடையைச் சற்றி தாள்களை கசக்கி எறிகிறார்கள். கழிவிடங்களில் தேவையற்று நீரைச் சிந்துகிறார்கள்.
ஆனால் இதே தமிழர்கள் ஜேர்மனிய நிகழ்வுகளுக்கு போகும் போது மட்டும் பக்குவமாக நடந்து கொள்கிறார்கள். கழிவிடங்களை சுத்தமாகப் பேணுகிறார்கள்.
— ஏலையா க.முருகதாசன்
575 total views, 2 views today
1 thought on “சாக்கடையும் மனிதர்களும்”