மகளிர்தின சிறப்பிதழ்

பங்குனி 08 மகளிர்தினம். இத்தினத்தை முன்னிட்டு வெற்றிமணி பங்குனிமாத இதழை மகளிர்தின சிறப்பிதழாகவும். இன்று புலம்பெயர் நாட்டில் சிறந்த எழுத்தாளராக, கவிஞராகவும் சொற்பொழிவாளராகவும் நூல் ஆசிரியராகவும் பன்முகத் திறன்வாய்ந்த சந்திரகௌரி சிவபாலன் (கௌசி) அவர்களை இம்மாதம் வெற்றிமணியின் கௌரவ ஆசிரியராக நியமித்து கௌரவிக்கின்றது.

இக் கௌரவத்தை பெறுபவர் திருமதி.கௌசி சிவபாலன் அவர்கள் இன்றைய சமுகத்தின் அசைவுகளை நன்கு அவதானித்து அன்றைய இலக்கியங்களுடன் நேர்பார்த்து நெறி சொல்வதில் வல்லவர். தினமும் ஒரு படையல் விடியலில் வரும் வண்ணம் தன் நேரத்தை இலக்கியத்தில் தொலைத்தவர். இந்த தொலத்தல் என்பது எல்லையில்லா மகிழ்ச்சியைத் தருவது.

அடிப்படைக்கல்வி ஏறாவூர் மகாவித்தியாலயம் மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தர தேசிய பாடசாலை. பட்டப்படிப்பு பேராதனைப்பல்கலைக்கழகம். அங்கு தமிழ் சிறப்புக் கலைமாணி பட்டம்.

கொழும்பு நுகேகொட திறந்த பல்கலைக்கழகத்தில் கல்வியியல் டிப்ளோமா பட்டம் ஜேர்மனியில் றநவைநசடிடைனரபெ – யுடடவயபள ளுநnழைசநn டீநவசநரரபெ பெற்றவர். தற்போது இணையத்தளம் றறற. பழறளல.உழஅ மற்றும் லழரவரடிந மயயெட இல் ஏநவவip pயசஎயi நடத்திவருகின்றார்
இவரது முதல் பத்திரிகைப் படைப்பு 1983 இல் தினகரன் பத்திரிகையில் யானையுரியும் உமையாள் அச்சமும் என்னும் படைப்புடன் ஆரம்பமானது. தற்போது மூன்று நூல்கள் வெளியீடு செய்துள்ளார்.
என்னையே நானறியேன் (நாவல்) முக்கோண முக்குளிப்பு (கட்டுரைத்தொகுப்பு) இலங்கை, இலண்டன், மலேசியா, யேர்மனி போன்ற நாடுகளில் வெளியீடு செய்யப்பட்டது. வெள்ளையுடைக்குள் கரையும் பருவம் (சிறுகதைத் தொகுப்பு) இலங்கையிலும் யேர்மனியிலும் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

கௌரவ ஆசிரியர்
கௌசி சிவபாலன்

1,002 total views, 2 views today